மரபணு மாற்றப்பட்ட கடுகு: மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: 'சுப்ரீம் கோர்ட் அனுமதி பெற்ற பிறகே, மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை விற்பனை செய்யப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தடுத்து நிறுத்தக் கோரி வழக்கு:

உரிய பரிசோதனைகள் செய்யாமல், மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் விற்கப்படுவதையும், விதைக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, இந்த விதைகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்ததது.

விற்கப்படாது:

மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் அனுமதி பெறாமல், இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் விற்கப்படாது; அதேபோல் விளைநிலத்திலும் பரிசோதனை செய்யப்படாது என்று உறுதியளிக்கிறோம்.

Newsletter