தமிழகம் இரண்டாம் பசுமைப்புரட்சி உற்பத்தி செய்ய - விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள்

தோட்டக்கலைத் துறையின் மூலம் மானியத்திட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து அதிகளவு பழங்கள் வகை காய்கறிகளை உற்பத்தி செய்திட வேண்டும் என விவசயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வேண்டுகோள். 

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம் பொகலூர் ஊராட்சியில் முன்னோடி விவசாயி செல்வராஜ் மானியத்திட்டத்தில் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு வெள்ளிரி விவசாயம் பயிரிடப்பட்டுள்ளதை, செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டார். 



பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில்:-

உணவு உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் பசுமைப்புரட்சி உற்பத்தி செய்யும் விதமாக வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில், தோட்டக்கலைத் துறையின் மூலம் குறைந்த தண்ணீரில் அதிகளவு விவசாயப்பணிகளை மேற்கொள்ள சொட்டுநீர் பாசனமுறை அறிமுகப்படுத்தப்பட்டு இதன்மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பயன்படுவிதமாக 75 சதவீத மானியத்திற்குமேல் சொட்டுநீர் பாசனத்திற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு விவசாயிகள் சிறப்பான முறையில் பல்வேறு வகையான பழங்கன்றுகள் மற்றும் உயர்ந்தரக காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன் தற்பொழுது வெள்ளிரி பயிரிடவும் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவு விவசாயி பணிகளை மேற்கொள்ள இத்திட்டம் மிக பயனுள்ளதாக இருந்து வருகின்றன. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டுரக காய்கறி விதைகள் மற்றும் நடவுச் செடிகள் ரூ.54,222 இலட்சம் மதிப்பில் 50 சதவிகித மானியத்தில் 1920 விவாசயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. துல்லய பண்ணையம் திட்டத்தின் 953.13 எக்டர் பரப்பளவில் ரூ.253.905 இலட்சம் மதிப்பில் சொட்டு நீர் பாசனம் அனைத்து உயர் விளைச்சல் தரும் காய்கறி வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தேசிய நுண்ணீர் பாசன இயக்கத்தில் சொட்டு நீர் பாசனத் திட்டத்தின் கீழ் 4680 எக்டர் பரப்பளவில் ரூ.2640.307 இலட்சம் செலவில் சொட்டு நீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைச் சார்ந்த பண்ணயம் அமைக்க ரூ.136.81 இலட்சம் செலவில் 396 எக்டர் நிலம் சீர்செய்து ஆழ்க்குழாய் கிணறுகள் அமைத்து காய்கறி சாகுபடி செய்யும் வகையில் விதைகள், கன்றுகள், இடுபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.854.47 இலட்சம் மதிப்பீட்டில் தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு விரிவாக்கம், பசுமைக் குடில் அமைத்தல், நிழல்வலை மற்றும் நிலப்போர்வை அமைத்தல் போன்ற பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறைகள் மற்றும் சிப்பம் கட்டும் அறை, குறைந்த சேமிப்பு கிடங்கு போன்ற அறுவடை பின்செய் நேர்த்தி முறைகள், மண்புழு உரக் கூடாரம், தேனீ வளர்ப்பு, மினி டில்லர், பவர் டில்லர், தெளிப்பான்கள், விவசாயிகள் பயிற்சி போன்ற திட்டங்கள் செயல்படுத்தபட்டு 5529 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் ரூ.39.726 இலட்சம் மதிப்பீட்டில் தோட்டக்கலைப் பயிர்கள் 320 எக்டர் பரப்பு விவவாக்கம் செய்யப்பட்டு 330 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர்.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.3.81 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தின் 975 எக்டர் அளவில் மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளன.

மானாவாரி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் 100 எக்டர் பரப்பில் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளன. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில் 80 எக்டர் பரப்பளவில் ரூ.28.80 இலட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய உதவிகள்  வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட தோட்டக்கலைத் துறை திட்டங்களை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பயன்பெறுமாறு அவர் தெரிவித்தார்.

Newsletter