2-ஆவது நாளாக மழை: நேரடி நெல் விதைப்பு பணி தீவிரம்

வேதாரண்யம் பகுதியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்ததைத் தொடர்ந்து, மானாவாரி வயல்களில் நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட கிராமங்களின் சுற்றுப் பகுதியில் வியாழக்கிழமை மழை பெய்தது.  
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மற்றும் பகல் நேரங்களில் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதில், கருப்பம்புலம், வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம்,கரியாப்பட்டினம் பகுதியில் சற்று கனமாகவும், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் நகரப் பகுதியில் லேசாகவும் மழைப் பெய்தது. இதைத்தொடர்ந்து, மானாவாரி நிலங்களில் நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Newsletter