மண் பரிசோதனை: வேளாண் துறை அறிவுறுத்தல்

விவசாயிகள் கட்டாயம் மண் பிரிசோதனை செய்ய வேண்டும் என குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் ஏழுமலை அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாய நிலத்தில் மண் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனையால் மண்ணில் இருக்கும் ஊட்டச் சத்துகளின் நிலவரம் விவசாயிக்கு தெரிய வருகிது. இந்த நிலவரத்தினை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல, பயிரிடுதல் நடைபெறுகிறது.

ரசாயன உரங்கள் அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும். பயிர் அறுவடைக்குப் பிறகு மண்ணில் உள்ள ஊட்டச் சத்துகள் குறைந்துவிடும். எனவே, மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும்.

மண் பரிசோதனை மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு, உரமிடுதல், பயிரிடுதல், நீர்ப் பாசனம் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பயிருக்கு முழுமையான வளர்ச்சி கிடைக்கும். எனவே, மண் பரிசோதனை செய்து தேவைக்கேற்ப நிலத்துக்கு உரமிடுதால் நல்லது என அதில் தெரிவித்துள்ளார்.

Newsletter