விவசாயிகளை மகிழ்விக்கும் மரவள்ளிக் கிழங்குகள்


மரவள்ளி பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களில் சாதகமற்ற வானிலை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், கடந்த பருவத்தில் அதிக உற்பத்தியினால் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் மிளகு, முந்திரி மற்றும் காய்கறி போன்ற பயிர்களுக்கு மாறியுள்ளனர். தமிழ்நாட்டில் வெள்ளை ஈ தாக்குதலாலும் சில இடங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, மரவள்ளிக்கு தேவை அதிகம் இருப்பதால் வரும் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 15 ஆண்டுகளாக சேலம் சந்தையில் நிலவிய மரவள்ளியின் விலையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஊரகமேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்பு திட்டம், சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான மரவள்ளியின் பண்ணை விலை அறுவடையின் போது டன்னிற்கு ரூ.9000 முதல் ரூ.10000 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், அல்லது காய்கறிப் பயிர்கள் துறை பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter