8 ஆண்டுகளின் நிலவரத்தின்படி, வரும் மாதங்களில் வாழையின் விலை நிலையாக இருக்கும்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் மூலம் வாழை நிலவரம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அறுவடையாகும் வாழையின் விலை நிலையாக இருக்கும் என தகவல். விவசாயிகள் விற்பனை செய்ய விலை முடிவுகளை எடுக்க ஏதுவாக இருக்கும்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மதிப்பின்படி, வாழை சாகுபடி 2015-16 ஆம் ஆண்டு இந்தியாவில் 1.13 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 33.82 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தில் பொதுவாக கோயம்புத்தூர், தேனி, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு வாழை பயிரிடப்படுகிறது. திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை வாழை விற்பனை செய்யும் முக்கிய சந்தைகளாகும்.

இந்தியாவில் வாழை உற்பத்தியில் பெரும் பகுதி உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுகின்றது. உலகளவில் வாழை உற்பதியில் இந்தியா 30 சதவீதம் பங்களிக்கின்றது. ஆனால் ஒரு சதவிகிதத்திற்கு குறைவாகவே ஏற்றுமதி செய்கின்றது. இந்தியாவில் வாழை கத்தார், சவுதி, அரேபியா, ஒமன், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விரும்பும் ஜி-9 என்கிற ரகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

வாழையின் வரத்து அதிகமானதால் வாழையின் விலை குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் கூட பண்டிகை காலங்கள் தொடர்ந்து வருவதால் வரும் மாதங்களில் வாழையின் தேவைகள் அதிகளவில் இருப்பதாலும், வாழையின் விலை நிலையாக இருக்கும்.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த 15 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன் மற்றும் கற்பூரவள்ளி வாழை ரகங்களின் விலை நிலவரங்களையும் 8 ஆண்டுகள் நிலவிய நேந்திரன் வாழை நிலவரத்தையும் ஆய்வு செய்தது அதன் படி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு விலை ரூ.13-15, கற்பூரவள்ளி ரூ.18-20 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.35-38 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தக்க விற்பனை முடிவுகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது.

Newsletter