உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: வியாழக்கிழமை மிலாடி நபி அரசு விடுமுறையையொட்டி, ஒரு நாள் முன்னதாகவே கொப்பரை ஏலம் விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் வியாழன் தோறும் நடைபெற்று வருகின்றது. உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதி உள்ள விவசாயிகள் இந்த ஏலத்தில் பங்கேற்று வருகின்றனர் .இந்த வாரம் வரும் வியாழன் 28ஆம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறையாகும். இதன் காரணமாக ஒரு நாள் முன்னதாக நாளை 27ஆம் தேதி இ நாம் திட்டத்தின் கீழ் மறைமுக ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter