கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்றது. இதில் மற்றும்‌ பழங்குடியின மக்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி நடைபெற்றது


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் உழவியல் துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில்‌ ஆணைக்கட்டிக்கு உட்பட்ட சேம்புக்கரை கிராமத்தில்‌ இருந்து 35 பேர்‌ கலந்து கொண்டனர்‌.



இதில் ஒருங்கிணைந்த பண்ணைய முதன்மை உழவியல்‌ விஞ்ஞானி முனைவர்‌ பி.எம்‌. சண்முகம்‌ வரவேற்று உரையாற்றினார்‌. இதே போல் பயிற்சி துவக்க விழாவில்‌ தலைமை யேற்று பேசினார்.



பின்னர் பயிர்‌ மேலாண்மை இயக்குனர்‌ முனைவர்‌ எம்‌ .கே.கலாராணி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒருங்கிணைந்த பண்ணையத்தில்‌ நாள்‌, வார, மாத மற்றும்‌ ஆண்டு வருமானத்தை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள்‌ குறித்து எடுத்துரைத்தார்.

பயிர்‌ வளர்ச்சியில்‌ நுண்ணூட்டச்சத்துக்களின்‌ முக்கியத்துவம்‌ குறித்தும்‌ விரிவாக அவர் எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய உழவியல்‌ துறைத்‌ தலைவர்‌ முனைவர்‌ பி.பாசுராமன்‌ ஒருங்கிணைந்த பண்ணையத்தின்‌ முக்கியத்துவம்‌ பற்றி தெரிவித்தார்

இதே போல் நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர்‌ முனைவர், பி .எம்‌.சண்முகம்‌, காலநிலை மாற்றத்திற்கேற்ப ஒருங்கிணைந்த பண்ணையத்தில்‌ நிலையான இலாபம் பெறுவதற்கான உத்திகள்‌ பற்றியும்‌ தெரிவித்தார்

ஒருங்கிணைந்த பண்ணையத்தில்‌ கால்நடைகளின்‌ முக்கியத்துவம்‌ பற்றி கால்நடை மருத்துவர்‌ முனைவர்‌ எம்‌ .திருநாவுக்கரசு கருத்துகளை எடுத்துரைத்தார்.

விளைபொருள்களின்‌ மதிப்புக்கூட்டுதல்‌ பற்றி உணவியல்‌ துறை பேராசிரியர்‌ முனைவர்‌ பி.கீதா, செயல்முறை விளக்கம்‌ அளித்தார்

Newsletter