உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு - சாலையில் வீசிச் செல்லும் அவலம்!

தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளதால் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த தக்காளிகளை விவசாயிகள் சாலைகளில் கொட்டி விட்டு செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.



திருப்பூர்: தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளதால் உடுமலை அருகே விவசாயிகள் தங்களது தக்காளிகளை சாலைகளில் கொட்டி செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. நடப்பாண்டு கோடைகால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளவில்லை.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 கிலோ தக்காளி பெட்டி2400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.



தற்பொழுது வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிவைசந்தித்துள்ளது. உடுமலை சந்தையில் குறைந்த பட்ச விலையாக 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.50க்கும், அதிகபட்ச விலையாக ரூ.200 க்கும் கீழ் ஏலம் போனதால் தக்காளி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, வெயிலின் தாக்கம் மற்றும் விலை சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விளைந்த தக்காளி பழங்களை ரோட்டில் கொட்டும் அவல நிலை தற்பொழுது ஏற்பட்டு உள்ளது.



உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் இப்பகுதியில் தக்காளி பழங்கள் இருப்பு வைக்க குளிருட்டபட்ட கிடங்கும் à®¤à®•்காளி பழங்கள் மூலம் à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•ள் தயாரிக்கும்தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter