சின்ன வெங்காயத்திற்கான கோவை வேளாண் பல்கையின் விலை முன்னறிவிப்பு வெளியீடு!

சின்ன வெங்காயத்தின்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்ட விலை முன்னறிவிப்பு குழுவின் முடிவுகளின்‌ அடிப்படையில்‌, வரும்‌ அக்டோபர்‌ 2023 மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.45 முதல்‌ ரூ.48 வரை இருக்கும்‌ என‌ கணிக்கப்பட்டுள்ளது.


கோவை: வரும் அக்டோபர் மாத இறுதி வரை சின்ன வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ.45 முதல்‌ ரூ.48 வரை இருக்கும்‌ என கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விலை முன்னறிவிப்பு குழுவினரால் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக் கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்பு திட்டமானது, சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சின்ன வெங்காயம்‌ தென்னிந்தியாவில்‌ அதிகம்‌ பயிரிடப்படுகிறது. வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நல அமைச்சகத்தின்‌ முதல்‌ முன்கூட்டிய மதிப்பீடுகளின் படி ( 2022-23), தமிழ்நாட்டில்‌ சின்ன வெங்காயம்‌ 0.46 லட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 5.53 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுகிறது.

திண்டுக்கல்‌ , திருப்பூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி மற்றும்‌ நாமக்கல்‌ ஆகியவை சின்ன வெங்காயம்‌ உற்பத்தி செய்யும்‌ மாவட்டங்களாகும்‌. தமிழ்நாட்டில்‌ 80 சதவிகிதம்‌ சின்ன வெங்காயம்‌ பயிரிடப்படுகிறது.

வரும்‌ மாதங்களில்‌ சின்ன வெங்காயத்தின்‌ விலை சீராக இருக்கும்‌ என வர்த்தக வட்டாரங்கள்‌ தெரிவிக்கின்றன. தற்போது, தமிழக சந்தைகளுக்கு கர்நாடகாவில்‌ மாநிலம்‌ சாம்ராஜ்‌ நகரிலிருந்து வரத்து வருகிறது. மேலும்‌, இன்னும்‌ ஓரிரு வாரங்களில்‌ கர்நாடகாவில்‌ உள்ள கொள்ளே காலிலும்‌, தமிழ்நாட்டின்‌ உடுமலைபேட்டை மற்றும்‌ தாராபுரத்திலிருந்தும்‌ வரத்து வரும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை முன்னறிவிப்பு குழு திண்டுக்கல்‌ சந்தைகளில்‌ நிலவிய சின்ன வெங்காயத்தின்‌ விலையை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையில்‌, வரும்‌ அக்டோபர்‌ 2023 மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயம்‌ சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ .45 முதல்‌ 48 வரை இருக்கும்‌ எனக்‌ கணிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ , கர்நாடகாவிலிருந்து வரும்‌ வரத்து மற்றும்‌ பருவ மழையை பொறுத்து சின்ன வெங்காயத்தின்‌ விலையில்‌ மாற்றங்கள்‌ இருக்கும்‌, எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அழுப்படையில்‌ சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

1. உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலைபேசி : 0422-2431405

2. இயக்குனர்‌ மற்றும்‌ ஒருங்கிணைப்பு அதிகாரி

நீர் மற்றும்‌ புவியியல்‌ ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலைபேசி : 0422-66112785

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

காய்கறி பயிர்கள்‌ துறை

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலை பேசி - 0422-6611374

Newsletter