உலக தென்னை தினம் கொண்டாட்டம்..!! கோவை வேளாண் பல்கலை கழகத்தில் கருத்துக்காட்சி, கலையரங்கு நிகழ்ச்சி.!

உலக தென்னை தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பொன்விழா அரங்கில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தென்னை சார்ந்த கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: உலக தென்னை தினத்தை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானோ உரங்கள் தொகுப்பினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் வழங்கினார்.



அதனைத்தொடர்ந்து தென்னை நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்தான துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

உலகத் தென்னை தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பொன்விழா அரங்கில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தென்னை சார்ந்த கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கலந்து கொண்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த தென்னை சார்ந்த கண்காட்சியினை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நானோ உரங்கள் தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் தென்னை நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்தான துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில் வேளாண்மை துறை இணை இயக்குனர் முத்துலட்சுமி தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் ஜரீன் வேதமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter