கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி… 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு..

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "வேளாண்‌ மற்றும்‌ தோட்டக்கலைப்‌ பயிர்களில்‌ ஊட்டச்சத்துக்‌ குறைபாடுகள்‌ மற்றும்‌ நிவர்த்தி முறைகள்‌" எனும்‌ தலைப்பில்‌ நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சியில் கோவை, திருப்பூர்‌, தருமபுரி, சேலம்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டத்தைச்‌ சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.



கோவை: மக்கள்‌ தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பயிர்களின்‌ விளைச்சலை அதிகரிக்க, வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பங்களை விவசாயிகள்‌ அறிந்து சரியான உர மேலாண்மையைக்‌ கையாள்வதன்‌ மூலம்‌ உற்பத்தியை பெருக்க வேண்‌டுமியதன்‌ அவசியம் குறித்து வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி‌ விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆகஸ்ட்‌ 31, 2023 அன்று பயிர்‌ வினையியல்‌ துறையின்‌ சார்பாக மாநில அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும்‌ செயல்‌ விளக்கம்‌ "வேளாண்‌ மற்றும்‌ தோட்டக்கலைப்‌ பயிர்களில்‌ ஊட்டச்சத்துக்‌ குறைபாடுகள்‌ மற்றும்‌ நிவர்த்தி முறைகள்‌" எனும்‌ தலைப்பில்‌ கோவை, திருப்பூர்‌, தருமபுரி, சேலம்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டத்தைச்‌ சேர்ந்த விவசாயிகளுக்கான ஒரு நாள்‌ விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு பயிற்சியில்‌ பங்கேற்ற, விவசாயிகளுக்கு பயிர்‌ வினையியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ à®….செந்தில்‌‌ வரவேற்புரையை வழங்கினார்‌.



இந்த விழிப்புணர்வு பயிற்சியில்‌ 500 க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ மற்றும்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலைய ஆராய்ச்சியாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி‌ துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்‌.



அவ்வுரையில்‌ மக்கள்‌ தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பயிர்களின்‌ விளைச்சலை அதிகரிக்க , வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பங்களை விவசாயிகள்‌ அறிந்து சரியான உர மேலாண்மையைக்‌ கையாள்வதன்‌ மூலம்‌ உற்பத்தியை பெருக்க வேண்‌டு மியதன்‌ அவசியத்தை வலியுறுத்தினார்‌.

அதனைத்‌தொடர்ந்து முனைவர்‌ எம்‌.கே.கலாராணி இயக்குநர்‌ (பயிர்‌ மேலாண்மை) பயிர்‌ வளர்ச்சி மற்றும்‌ வளர்சிதை மாற்றத்தில்‌ பேரூட்ட மற்றும்‌ நுண்ணூட்டச்‌ சத்துகளின்‌ முக்கியத்துவத்தையும்‌, அவற்றின்‌ செயல்பாடுகளைப்‌ பற்றியும்‌ தெளிவாக எடுத்துரைத்தார்‌. ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும்‌, பயிர்‌ பூஸ்டர்களை முறையாக பயன்படுத்தி மகசூல்‌ இழப்பிலிருந்து பயிர்களை காப்பாற்றிக்‌ கொள்ளும்‌ யுக்திகளை கையாள இப்பயிற்சி எவ்வளவு பயனுள்ளது என்பதையும்‌ விளக்கி கூறினார்.

மேலும்‌ இவ்விழாவில்‌ முனைவர்‌ பி.பொ.முருகன்‌, வேளாண்‌ விரிவாக்கக்கல்வி இயக்குநர்‌ கலந்து கொண்டு சரி விகித மற்றும்‌ உகந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சிகளால்‌ விவசாயிகள்‌ பெறும்‌ நன்மைகள்‌ பற்றி விளக்கமாக கூறினார்‌. இவ்விழாவில்‌ வி.வெங்கடசுப்ரமணியன்‌, இயக்குநர்‌, வேளாண்‌ தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்‌, மண்டலம்‌ XI, பெங்களூரு‌ சிறப்புரையாற்றினார்‌ .

அதில்‌ உரங்களின்‌ தேவையை அறிந்து அதனை சரியான விகிதத்தில்‌ பயிர்களுக்கு அளிப்பதன்‌ மூலம்‌ சுற்று கழலை பாதுகாப்பதுடன்‌ மனித வாழ்வை மேம்படுத்த முடியும்‌ என்பது பற்றி விளக்கினார்‌. மேலும்‌, இவ்விழிப்புணர்வு பயிற்சியில்‌ மூன்று தொழில்நுட்ப உரைகள்‌ இடம்‌ பெற்றது. பயிர்வினையியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ ஆர்‌.சிவக்குமார்‌‌ வேளாண்‌ பயிர்களில்‌ ஏற்படும்‌ பேரூட்ட மற்றும்‌ நுண்ணூட்டச்சத்துக்களின்‌ குறைபாட்டு அறிகுறிகள்‌ மற்றும்‌ அதனை நிவர்த்தி செய்யும்‌ முறைகளைப்‌ பற்றி விரிவாக விளக்கினார்‌.

தோட்டக்கலைப்‌ பயிர்களில்‌ ஏற்படும்‌ பேரூட்ட மற்றும்‌ நுண்ணூட்டச்‌ சத்துக்களின்‌ குறைபாட்டு அறிகுறிகள்‌ மற்றும்‌ அவற்றை நிவர்த்தி செய்யும்‌ வழி முறைகளை கிள்ளிக்குளம்‌, வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ பயிர்‌ வினையியல்‌ மற்றும்‌ உயிர்‌ வேதியியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ சு.சீனிவாசன்‌ விளக்கினார்‌.

நிறைவாக, TNAU பயிர்‌ பூஸ்டர்களைப்‌ பயன்படுத்தும்‌ முறை, தெளிக்கும்‌ பருவம்‌ மற்றும்‌ அதன்‌ நன்மைகளைப்‌ பற்றி பயிர்‌ வினையியல்‌ துறையின்‌ உதவி பேராசிரியர்‌ முனைவர்‌ வே.பாபு இராஜேந்திரபிரசாத்‌ தெளிவாக எடுத்துரைத்தார்‌. இவ்விழிப்புணர்வு பயிற்சியில்‌ பல்கலைக்கழக இயக்குநர்கள்‌ , பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ ஊழியர்கள்‌ கலந்து கொண்டனர்‌. 

நிறைவாக, இந்நிகழ்ச்சியின்‌ நன்றியுரையை பயிர்‌ வினையியல்‌ துறையின்‌ பேரா சிரியர்‌ முனைவர்‌ ப.பூமிநாதன்‌ வழங்கினார்‌. அடுத்தபடியாக, தென்னையில்‌ மகசூலை அதிகரிக்க TNAU தென்னை டானிக்கை பயன்படுத்துவதற்கான செயல்முறை விளக்கம்‌ துறை சார்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Newsletter