தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிறுகன்று - தொழில்நுட்ப பயிற்சி - பள்ளி மாணவர்களிடையே நல்ல வரவேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிறுகன்று - தொழில்நுட்ப பயிற்சியில் 20 பள்ளி மாணவர்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ கலந்துக்‌ கொண்டு பயனடைந்தனர்‌. இதில்‌ பள்ளி மாணவர்கள்‌ சிறுகன்று நாற்றுகள்‌ தயாரிப்பு பற்றி ஆர்வத்துடன்‌ செய்து காட்டினார்‌. இப்பயிற்சியில்‌ கலந்து கொண்ட மாணவர்கள்‌ மற்றும்‌ விவசாயிகளுக்கும்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.


கோவை: வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறுகன்று - தொழில்நுட்ப பயிற்சியில், தரமான மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்ய வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திலுள்ள அடிப்படை மற்றும்‌ சமூக அறிவியல்‌ துறையின்‌ மூலமாக சிறுகன்று - தொழில்நுட்ப பயிற்சி 23.08.2023 அன்று நடைபெற்றது.

இப்பயிற்சியின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌ ரா.ஜான்சி ராஸிவரவேற்புரையாற்றி தற்போது தரமான மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்ய வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து எடுத்துரைத்தார்‌. முனைவர்‌ க.த.பார்த்தீபன்‌ பேராசியர்‌ (வனவியல்‌)தரமான விதைத்‌ தேர்வு, நடவு முறைகள்‌, மரக்கன்று பராமரிப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்‌. முனைவர்‌ எஸ்‌.வரதராஜ்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ (அடிப்படை மற்றும்‌ சமூக அறிவியல்‌ துறை) வணிக ரீதியாக மரக்கன்று விற்பனை செய்வது பற்றி கூறினார்‌.

முனைவர்‌ ஐ.சேகர்‌, பேராசிரியர்‌ (வனவியல்‌)‌ சான்றிதழ்‌ மற்றும்‌ நாற்றங்கால்‌ உரிமம்‌ பெறுவது பறறி விளக்கிக்‌ கூறினார்‌. முனைவர்‌ மீ.திலக்‌, இணைப்‌ பேராசிரியர்‌ (நுண்ணியல்‌ துறை)‌ செறிவூட்டப்பட்ட மண்புழு உரம்‌ மற்றும்‌ இயற்கை உரம்‌ தயாரிப்பு பற்றி செயல்‌ விளக்கம்‌ மூலம்‌ செய்து காட்டினார்‌.

முனைவர்‌ பெ.குமார்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ (வனவியல்‌)‌ சிறுகன்று தேர்வு செய்தல், நாற்று உற்பத்தி மற்றும்‌ நாற்றங்கால்‌ பராமரிப்பு முறைகளைப்‌ பற்றி செயல்‌ விளக்கம்‌ மூலமாக செய்து காட்டினார்‌.

இதில் 20 பள்ளி மாணவர்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ கலந்துக்‌ கொண்டு பயனடைந்தனர்‌. இதில்‌ பள்ளி மாணவர்கள்‌ சிறுகன்று நாற்றுகள்‌ தயாரிப்பு பற்றி ஆர்வத்துடன்‌ செய்து காட்டினார்‌. இப்பயிற்சியில்‌ கலந்து கொண்ட மாணவர்கள்‌ மற்றும்‌ விவசாயிகளுக்கும்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

Newsletter