தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பார்த்தீனியம்‌ களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு - விவசாயிகள், மாணவர்கள் பங்கேற்பு

விவசாயிகள்‌, மாணவ, மாணவிகள்‌, பண்ணைத் தொழிலாளர்கள்‌, சுகாதாரபணியாளர்கள்‌ மற்றும்‌ உதவி வேளாண்மை அலுவலர்கள்‌, வேளாண்மை மேற்பார்வையாளர்கள் இளநிலை வேளாண்மை அலுவலர்கள்‌ மற்றும்‌ முதுநிலை வேளாண்மை அலுவலர்கள்‌ ஆகியோர்களுக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் பார்த்தீனீயம் களை செடி மற்றும் அதன் நச்சுத்தன்மை பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்களில்‌ பார்த்தீனியம்‌ களை செடி பற்றியும்‌ அதன்‌ நச்சுத்தன்மையால்‌ ஏற்படும்‌ பாதிப்புகள்‌ குறித்தும்‌ அவற்றை கட்டுப்படுத்தும்‌ முறைகளான உழவியல்‌, இரசாயன மற்றும்‌ உயிரியல்‌ முறைகள்‌ பற்றியும்‌ விளக்கப்பட்டது.

மத்திய அரசின்‌, களை ஆராயச்சி இயக்குநகரத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஒருங்கிணைந்த களை (மேலாண்மைத் திட்டத்தில்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ ஆகஸ்ட்‌ 16 முதல்‌ 22-ம்‌ தேதி வரை பார்த்தனியம்‌ விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இதன்படி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ களை மேலாண்மை பிரிவில்‌ கீழ்‌ பல்வேறு தரப்பினருக்கும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ பார்த்தினிய விழிப்புணர்வு முகாம்கள்‌ விவசாயிகள்‌, மாணவ, மாணவிகள்‌, பண்ணைத் தொழிலாளர்கள்‌, சுகாதாரபணியாளர்கள்‌ மற்றும்‌ உதவி வேளாண்மை அலுவலர்கள்‌, வேளாண்மை மேற்பார்வையாளர்கள் இளநிலை வேளாண்மை அலுவலர்கள்‌ மற்றும்‌ முதுநிலை வேளாண்மை அலுவலர்கள்‌ ஆகியோர்களுக்கு நடத்தப்பட்டன.

இந்த விழிப்புணர்வு முகாமின்‌ தொடக்கவிழாவில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கிழக்குப்பண்ணையில்‌ அனைத்து பண்ணைத்‌ தொழிலாளர்களுக்கும்‌ பார்த்தீனியம்‌ களை மேலாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இவ்விழாவில்‌ பயிர்‌ மேலாணர்மை இயக்குநர்‌ முனைவர்‌ எம்‌.கே.கலாராணி, உழவியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ ப.பரசுராமன்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்‌.

இந்த விழிப்புணர்வு முகாம்களில்‌ பார்த்தீனியம்‌ களை செடி பற்றியும்‌ அதன்‌ நச்சுத்தன்மையால்‌ ஏற்படும்‌ பாதிப்புகள்‌ குறித்தும்‌ அவற்றை கட்டுப்படுத்தும்‌ முறைகளான உழவியல்‌, இரசாயன மற்றும்‌ உயிரியல்‌ முறைகள்‌ பற்றியும்‌ விளக்கப்பட்டது. மேலும்‌ பண்‌ணைத்தொழிலாளர்களுக்கு பார்த்தீனிய செடிகளை உரமாக்குதல்‌ பற்றியும்‌ செயல்‌ விளக்கம்‌ செய்து காட்டப்பட்டது.

ஆகஸ்ட்‌ 16 முதல்‌ 22-ம்‌ தேதி வரை பல்‌வேறு இடங்களில்‌ நடத்தப்பட்ட முகாம்களில்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ களை மேலாண்மை பிரிவின்‌ முதன்மை விஞ்ஞானி முனைவர்‌. செ.ராதாமணி, இணைப்பேராசிரியர்‌ முனைவர்‌ ச.பாரதி, முனைவர்‌ ப.பாலசுப்பிரமணியன், இரா.தீபிகா, ஆ.கனகராஜ்‌ ஆகியோர்‌ பங்கேற்று இந்த நிகழ்ச்சியை சிறப்புரை நடத்தினர்‌.

Newsletter