தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் மண்டல கருத்தரங்கு - 72 வேளாண்மை அறிவியல்‌ நிலையங்கள்‌ பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகம்‌ இணைந்து நடத்தும்‌ வருடாந்திர மண்டல கருத்தரங்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆகஸ்ட்‌ 17 முதல்‌ 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகம்‌ இணைந்து நடத்தும்‌ வருடாந்திர மண்டல கருத்தரங்கில்‌ மண்டலத்தில்‌ உள்ள 72 வேளாண்மை அறிவியல்‌ நிலையங்களின்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகம்‌ இணைந்து நடத்தும்‌ வருடாந்திர மண்டல கருத்தரங்கு தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும்‌ தெலுங்கானா மாநிலங்களில்‌ உள்ள வேளாண்மை அறிவியல்‌ நிலையங்களுக்கான மண்டல கருத்தரங்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆகஸ்ட்‌ 17 முதல்‌ 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.



இக்கருத்தரங்கினை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக விரிவாக்கக்‌ கல்வி இயக்குநரகமும்‌, ஹைதராபாத்தில்‌ உள்ள வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாடு மற்றும்‌ ஆராய்ச்சி நிலையமும்‌ இணைந்து நடத்துகின்றன. மொத்தம்‌ 72 வேளாண்மை அறிவியல்‌ நிலையங்கள்‌ இக்கருத்தரங்கில்‌ கலந்து கொண்டன.



இக்கருத்தரங்கின்‌ தொடக்க விழா ஆகஸ்ட்‌ 17-ம்‌ தேதி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ அண்ணா அரங்கில்‌ தேசிய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ இணை இயக்குநர்‌ முனைவர்‌ உத்தம்‌ சிங்‌ கெளதம்‌ அவர்களால்‌ துவக்கி வைத்து, புத்தகங்கள்‌, தொழில்நுட்ப கையேடுகள்‌, வேளாண்‌ தொழில்நுட்பகாணொலி, வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாடு மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ செய்திமடல்‌ (Spark Bulletin) மற்றும் QR Code மூலம்‌ தொழில்நுட்பம்‌ போன்றவற்றை வெளியிட்‌டு தொடக்கவுரையாற்றினார்‌. இக்கருத்தரங்கின்‌ தொடக்கமாக, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ விரிவாக்க இயக்குநர்‌ முனைவர்‌ பி.பொ.முருகன்‌ அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார்‌. தொடர்ந்து வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாடு மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ ஷேக்‌மீரா வேளாண்மை அறிவியல்‌ நிலையங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்தும்‌, கடந்த ஆண்டின்‌ சாதனைகள்‌ குறித்தும்‌ விளக்கினார்‌.



இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகத்தின்‌ வேளாண்‌ விரிவாக்க துணை இயக்குநர்‌ முனைவர்‌ ஆர்‌.ஆர்‌.பர்மன்‌ அவர்கள்‌ தனது சிறப்புரையில்‌ வேளாண்மை அறிவியல்‌ நிலையங்களில்‌ நடைபெறும்‌ வயல்வெளி ஆய்வுகள்‌ மற்றும்‌ முதல்நிலை செயல்விளக்கத்‌ திடல்களின்‌ முக்‌ கியத்துவம்‌ பற்றி விளக்கினார்‌.

இனிவரும்‌ நாட்களில்‌ வேளாண்மை அறிவியல்‌ நிலையங்களில்‌, விவசாயிகளின்‌ தேவைகளை கண்டறிந்து தீர்வை வழங்கும்‌ மையமாக இருக்கும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌. ஆந்திரா மாநில Dr.YSR தோட்டக்கலைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ T. ஜானகிராம்‌ அவர்கள்‌ வாழ்த்துரை வழங்கினார்‌. அவர்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையங்கள்‌ நம்‌ நாட்டில்‌ மிகவும்‌ சிறப்பாக செயல்படுகின்றன என்றும்‌, அவற்றை ஆப்பிரிக்கா போன்ற நாடுகள்‌ பின்பற்ற முற்படுகின்றன என்றும்‌ தெரிவித்தார்‌.

மேலும்‌, அவர்‌ தோட்டக்கலையினை வேளாண்‌ அறிவியல்‌ நிலையங்கள்‌ அதிகமா மக்களிடையே ஊக்குவிக்க வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌. தெலுங்கானா மாநில தோட்டக்கலைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ நீரஜா பிராபாகர்‌ அவர்கள்‌ அம்மாநிலத்தின்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலைய செயல்பாடுகள்‌ பற்றியும்‌, அவற்றின்‌ சேவைபற்றியும்‌ விவரித்தார்‌.

தொடர்ந்து தமிழ்நாடு மீன்வளப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ சுகுமார்‌ அவர்கள்‌ மீன் வளத்தின்‌ முக்கியத்துவம்‌ பற்றியும்‌ அது கிராமப்புற வளர்ச்சியில்‌ மிகுந்து பயனுள்ளதாக அமையும்‌ என்று கூறினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி அவர்‌கள் தலைமையுரையாற்றினார்‌. அவர்‌ வேளாண்மை அறிவியல்‌ நிலையங்களின்‌ புதிய முயற்சிக்கான பன்முகப்‌ பயிற்சிகள்‌ தொழில்முனைவோர்‌ பயிற்சி மற்றும்‌ திறன்‌ மேம்பாடு பற்றிய செயல்பாடுகளை பற்றி விவரித்தார்‌. அவர்கள்‌ தருமபுரி வேளாண்‌ அறிவியல்‌ நிலையத்தில்‌ நடைபெற்ற சிறுதானிய மாநாடு மற்றும்‌ மதுரையில்‌ நடைபெற்ற உழவர்‌ தினவிழா போன்றவற்றின்‌ மூலம்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக தொழில்நுட்பங்கள்‌ விவசாயிகளிடையே பெரும்‌ வரவேற்ப்பை பெற்றுள்ளன என்றும்‌ கூறினார்‌. 

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ இணை இயக்குநர்‌ முனைவர்‌ உத்தம்‌ சிங்‌ கெளதம்‌ அவர்‌கள்‌ தமது உரையில்‌ ஹைதராபாத்‌ வேளாண்மை தொழில்நுட்‌ப பயன்பாடு மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ புதிய முயற்சிகளை பெரிதும்‌ பாராட்டினார்‌. 

வேளாண்மை அறிவியல்‌ நிலையங்கள்‌ சர்வதேச நோக்குடன்‌ செயல்பட வேண்டும்‌ என்றும்‌ கிராமப்புற மக்களின்‌ முன்னேற்றத்தில்‌ பெரும்பங்கு வகிக்க வேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தினார்‌. வேளாண்மை தொழில்நுட்‌பபயன்பாடு மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதன்மை விஞ்ஞானி முனைவர்‌ J.V.பிரசாத்‌ அவர்கள்‌ நன்றியுரை நல்கினார்‌. இக்கருத்தரங்கில்‌ இம்மண்டலத்தில்‌ உள்ள 72 வேளாண்மை அறிவியல்‌ நிலையங்களின்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter