கோவை வேளாண் பல்கலையில் வரும் ஆக.7-ல் அங்கக வேளாண் பயிற்சி!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலகமாகவோ பதிவு செய்து பங்கேற்கலாம் என அறிவிப்பு


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அங்கக வேளாண்மை கட்டண பயிற்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்த பயிற்சியில் அங்கக வேளாண்மையின் அடிப்படை நெறிமுறைகள், அங்கக மேலாண்மை, அங்கக பூச்சி நோய் மேலாண்மை, அங்கக உன் நிர்வாகம் மற்றும் அங்ககச் சான்றிதழ், அங்கசு இடு பொருட்கள் தயாரிப்பு, அங்கக விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவோடு கூடிய செயல் விளக்கங்களும் நடைபெறும்.

இந்த பயிற்சிக்கான கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 750 ஆகும். விருப்பமுள்ள விவசாயிகள் 9486734404 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாகவும் வந்தும் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter