கோவை வேளாண் பல்கலையில் ஜூன் 27, 28-ல் மசாலா பொடி மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் 2 நாள் பயிற்சி!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் மசாலா பொடிகள், காளான்‌ ஊறுகாய்‌, வாழைப்பூ ஊறுகாய்‌, பாகற்காய்‌ ஊறுகாய்‌ உள்ளிட்ட பல்வேறு உணவுகள் தயாரிக்கும் 2 நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மசாலா பொடிகள்‌ மற்றும்‌ ஊறுகாய்கள்‌ தயாரிப்பு பயிற்சிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ மசாலா பொடிகள்‌ மற்றும்‌ ஊறுகாய்கள்‌ தயாரிப்பு பயிற்சி வரும் 27.06.2023 மற்றும்‌ 28.06.2023 ஆகிய இரண்டு நாட்கள்‌ நடைபெறுகிறது.

இந்த பயிற்சியானது இரண்டு நாட்களிலும் காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும். 

இந்த 2 நாள் பயிற்சியில்,

1) மசாலா பொடிகள்‌

2) தயார்நிலை பேஸ்ட்‌

3) காளான்‌ ஊறுகாய்‌

4) வாழைப்பூ ஊறுகாய்‌

5) பாகற்காய்‌ ஊறுகாய்‌

6) கத்தரிக்காய்‌ ஊறுகாய்‌

7) வெங்காய ஊறுகாய்

ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்‌.

இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள்‌ பயிற்சியின் முதல்‌ நாளன்று ரூ.1,770/- (ரூ.1500 * GST 18%) செலுத்த வேண்டும்‌. à®‡à®µà¯à®µà®¾à®±à¯ அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தம்‌: வாயில்‌ எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641003

மேலும்‌ விபரங்களுக்கு:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவா்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

அலைபேசி எண் - 94885 18268, தொலைபேசி எண்‌ - 0422 6611268 என்ற முகவரி மற்றும் தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Newsletter