இருபயன்‌ வேளாண்‌ கருவிக்கான தேசிய காப்புரிமையை‌ பெற்ற கோவை வேளாண் பல்கலை.!

இருபயன்‌ வேளாண்‌ கருவிக்கான தேசிய காப்புரிமையை‌ கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலை-க்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகம்‌ மற்றும்‌ தொழில்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ உள்ள காப்புரிமைகள்‌, வடிவமைப்புகள்‌ மற்றும்‌ வர்த்தக முத்திரைகளின்‌ கட்டுப்பாட்டாளர்‌ ஜெனரல்‌ அலுவலகத்தால்‌ இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு இருபயன்‌ வேளாண்‌ கருவிக்கான தேசிய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌ இருபயன்‌ வேளாண்‌ கருவிக்கான தேசிய காப்புரிமையை‌ பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம்‌ மற்றும்‌ தொழில்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ உள்ள காப்புரிமைகள்‌, வடிவமைப்புகள்‌ மற்றும்‌ வர்த்தக முத்திரைகளின்‌ கட்டுப்பாட்டாளர்‌ ஜெனரல்‌ அலுவலகத்தால்‌ இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.



வேளாண்‌ நிலங்களில்‌ களையெடுத்தல்‌ மற்றும்‌ மண்‌ அணைத்தல்‌ ஆகிய இரு வேலைகளையும்‌ ஒரே கருவி மூலம்‌ செய்யும்‌ வகையில்‌ இருபயன்‌ வேளாண்‌ கருவி வடிவமைக்கப்பட்டது. இக்கருவி, சக்கரம்‌, கத்தி, சட்டம்‌ மற்றும்‌ கைப்பிடி பாகங்களைக்‌ கொண்டது. கருவியின்‌ சீரான இயக்கத்திற்காக இரண்டு சக்கரங்கள்‌ பொருத்தப்பட்டுள்ளது.

கருவியின்‌ அடிப்பாகத்தில்‌ உள்ள முனையில்‌ பொருத்தப்பட்டுள்ள கத்திகள்‌, களைகளை வெட்டுவது மட்டுமல்லாமல்‌ மண்ணை அணைக்கும்‌ தன்மையையும்‌ கொண்டது. இந்த களையெடுக்கும்‌ கருவியின்‌ கைப்பிடி உயரத்தை பயன்பாட்டுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக்‌ கொள்ளலாம்‌.

Newsletter