உடுமலையில் சின்னவெங்காய சாகுபடி தீவிரம் - தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்!

சின்ன வெங்காயம், ரகங்களின் தன்மை மற்றும் பருவ நிலைக்கு ஏற்ப, ஏப்ரல், மே மாதங்களிலும், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் பயிரிடலாம். காலம் தவறி பயிரிட்டால், காய் பிடிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத், சின்னவெங்காய சாகுபடி தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சின்ன வெங்காயம், ரகங்களின் தன்மை மற்றும் பருவ நிலைக்கு ஏற்ப, ஏப்ரல், - மே மாதங்களிலும், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் பயிரிடலாம்.



காலம் தவறி பயிரிட்டால், காய்பிடிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பயிர்ப்பா துகாப்பை பின்பற்றினால் மகசூல் அதிகரிக்கலாம்.



தரமான விதை வெங்காயம் தேர்வு, தடுப்பு பயிராக, வெங்காயம் பயிரிட்ட வயலை சுற்றிலும், 2 வரிசை மக்காச்சோளம் நடவு செய்ய வேண்டும்.



சூடோனமாஸ் மற்றும் டிரைகோடெர்மா வாயிலாக, விதை நேர்த்தியும், நடவு செய்த 40 நாட்களில், அசாடிராக்டின் பயன்படுத்தி வெங்காயத்தில் ஈக்களை கட்டுப்படுத்த, மெத்தில் டெமட்டானும், வெட்டுப்புழு கட்டுப்படுத்த, குளோரிபைரிபாஸ், இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மான் கோசெப் அல்லது ஜூனட் மருந்தினை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter