கோவை வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கு - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில், தேசிய தேனி வாரிய துணை ஆணையாளர் மனோஜ்சர்மா, தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டனர்.


கோவை: வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான தேனீவளர்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் மாவட்ட அளவிலான தேனீவளர்ப்பு குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் தேசிய தேனி வாரிய துணை ஆணையாளர் மனோஜ்சர்மா, தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி, தாவர பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மைய இயக்குனர் டாக்டர் சாந்தி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் முத்துலெட்சுமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இக்கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர், வேளாண்மையுடன் கூடுதலாக விவசாயம் தொடர்பான பல்வேறு பணிகள் மேற்கொள்ளும் போது அது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அதனடிப்படையில், தேனீ வளர்ப்பு என்பது மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும். தேனை சந்தை படுத்துதல், பாக்கெட்டிங், தேனின் தனித்தன்மை குறித்து சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றுதல், தொடர்பாக இந்தக் கருத்தரங்கு உங்களுக்குப் பயனுடையதாக இருக்கும்.



தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேனீ வளர்ப்பு தொடர்பாகச் சந்தேகங்கள் தொழில்நுட்ப உத்திகள், சவால்கள் குறித்தும் கேட்டு அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்குகள் விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும்.



தேனீக்களின் மூலம் பெறப்படும் தேன், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். தேனிக்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது மனித வாழ்க்கைக்கும் பேரூதவியாக உள்ளது என தெரிவித்தார்.

Newsletter