தாராபுரத்தில் வேளாண் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகளும் மானியம் உள்ளிட்ட பலன்களை பெற விண்ணப்பிக்கலாம் என தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கணேசன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகளும் மானியம் உள்ளிட்ட பலன்களை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

தாராபுரம் வட்டாரத்தில் மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகளும் சலுகைகள் பெற பட்டா எண், சர்வே எண், ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண் போன்ற ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அல்லது உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் 13க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் மூலம் அறிவிக்கப்படும் திட்டத்தின் மூலம் விவசாயிகள் மானியம் எளிதில் பெற முடியும். இப்பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகள் தங்கள் பகுதிக்கு வரும் போது கட்டாயமாக ஆவணங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter