உடுமலையில் விவசாயிகளுக்கான சிறப்பு கண்காட்சி

மடத்துக்குளம் வட்டார வேளாண்துறை சார்பில் நடைபெற்ற 'கிசான் மேளா'வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட விவசாயிகள் கண்காட்சியில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் குறித்த செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வேளாண் துறை சார்பில் நடைபெற்ற கிசான் மேளாவில், விவசாயிகளுக்கான சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

மடத்துக்குளம் வட்டார வேளாண்துறை, அட்மா திட்டம் மற்றும் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், 'கிசான் மேளா' நிகழ்வு நடைபெற்றது. இதில், மடத்துக்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஈஸ்வரன், பேரூராட்சித்தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர்.



இதில், வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், துணை இயக்குனர் சுருளியப்பன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்சிலிராஜ்குமார் உள்ளிட்டோர், அரசால், வேளாண்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.



தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகளுக்கான கண்காட்சியில், 'ட்ரோன்' வாயிலாக விளைநிலங்களுக்கு மருந்து தெளித்தல் மற்றும் பண்ணைக்கருவிகள் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து, வானவராயர் வேளாண் கல்லுாரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக உதவி வேளாண் அலுவலர் பாலு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter