மிளகாய்‌ வற்றலுக்கான தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்ட விலை முன்னறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ படி தரமான சன்னம்‌ ரக மிளகாய்‌ வற்றலின்‌ சராசரி பண்ணை விலை கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக விலை முன்னறிவிப்பு வெளியீடு.



கோவை: தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ படி மிளகாய்‌ வற்றலுக்கான சராசரி பண்ணை விலை கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, மிளகாய்‌ வற்றலுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

உலகளவில்‌, மிளகாய்‌ வற்றல்‌ உற்பத்தி, நுகர்வோர்‌ மற்றும்‌ ஏற்றுமதியில்‌ இந்தியா முதன்மையாக திகழ்கிறது. சீனா, தாய்லாந்து, எத்தியோப்பியா மற்றும்‌ இந்தோனேசியா ஆகியவை மிளகாய்‌ உற்பத்தி செய்யும்‌ முக்கிய நாடுகளாகும்‌.

இந்திய மிளகாயின்‌ நிறம்‌ மற்றும்‌ காரத்தன்மை ஆகிய வணிக பண்புகளுக்காக உலகப்‌ புகழ்‌ பெற்றது. மொத்த மிளகாய்‌ உற்பத்தியில்‌ 80 சதவீதம்‌ உள்நாட்‌டிலேயே நுகரப்படுகிறது. இந்தியாவில்‌, 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ 8.52 லட்சம்‌ ஹெக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 15.78லட்சம்‌ டன்‌ மிளகாய்‌ உற்பத்தி செய்யப்பட்‌டுள்ளது.

இது, இந்திய பரப்பளவில்‌ 29 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள சுவையூட்டிகளாகும். இந்தியாவில்‌ மிளகாய்‌ பயிரிடப்படும்‌ முக்கிய மாநிலங்கள்‌ ஆந்திரப்‌ பிரதேசம்‌, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும்‌ தமிழ்நாடு ஆகியவை மிளகாய்‌ சாகுபடியின்‌ மொத்த பரப்பளவில்‌ கிட்டத்தட்ட 75 சதவீதமாகும்‌.

இந்தியா, 2021-22-ஆம்‌ ஆண்டில்‌ 2.59 லட்சம் டன்‌ மிளகாயை ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய மிளகாய்‌ முக்கியமாக சீனா, இலங்கை மற்றும்‌ பங்களாதேஷ்‌ போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில்‌ 2020-21ம்‌ ஆண்டில்‌ 0.54 லட்சம்‌ எக்டரில்‌ பயிரிடப்பட்டு 0.24 லட்சம்‌ டன்‌ மிளகாய்‌ உற்பத்தி செய்யப்பட்டது. மிளகாய்‌ வற்றல்‌ முக்கியமாக ராமநாதபுரம்‌ மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டங்களில்‌ பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில்‌ முண்டு மற்றும்‌ சன்னம்‌ ஆகியவை முக்கிய இரகங்களாக பயிரிடப்படுகிறது. இவை அக்டோபர்‌.நவம்பர்‌ மாதங்களில்‌ விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி, கடந்த பருவநிலை காட்டிலும் இந்த முறை ஆந்திராவிலிருந்து மிளகாய் வரத்து போதிய அளவில் டிசம்பர் மாதத்திலிருந்து வரத்தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் பரப்பளவு மற்றும் உற்பத்தி இயல்பாகவே உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் சந்தைக்கு மிளகாய் வரத்து வர தொடங்கும் என அறியப்படுகிறது. புதிய வரத்து சந்தைக்கு வரும்போது தமிழகத்தில் விலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில்‌, விவசாயிகள்‌ விதைப்பு முடிவுகளை எடுக்க எதுவாக விலை முன்னறிவிப்பு திட்டம்‌, கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலி சந்தையில்‌ நிலவிய மிளகாய்‌ விலையை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின்‌ அடிப்படையில்‌, அறுவடையின்‌ போது தரமான சன்னம்‌ ரக மிளகாய்‌ வற்றலின்‌ சராசரி பண்ணை விலை கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அழப்படையில்‌, விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தை தகவல்‌ மையம்‌,

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌- 641003.

தொலை பேசி - 0422 - 2431405,

இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி,

தமிழ்நாடு நீர்வள நிலவளத்‌ திட்டம்‌,

நீர்‌ நுட்ப மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌- 641 003,

தொலை பேசி - 0422-6611278.

மற்ற விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

வாசனை மற்றும்‌ தோட்டக்கலை பயிர்கள்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலைபேசி - 0422-6611284

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter