தாராபுரம் நெல் வயல்களில் எலிகள் தொல்லை - விவசாயிகள் வேதனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நெல்வயல்களில் அதிகரித்துள்ள எலிகள், நெற்கதிர்களைக் கடித்து சேதப்படுத்துவதால் குறுவை சாகுபடி விளைச்சலே கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் கண்ணீர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆறு மற்றும் வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விதைப்பு மற்றும் நாற்று நடவு பணிகள் மூலம் நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, நெல் கதிர்கள் நன்கு வளர்ந்து பயிர்கள் அனைத்தும் சில நாட்களில் மகசூல் பருவம் எனும் பால் பருவத்திற்கு அடுத்து கதிர் பருவம் வரும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆத்துக்கால் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெற்வயல்களில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. பால் பருவத்திற்கு அடுத்து கதிர்களில் நெல்மணிகள் முத்துவதற்கு முன்பு இளம் நெய்பயிர்கள் இனிப்பாகவும் எலிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சுலபமாக இருக்கும் என்பதால், நூற்றுக்கணக்கான எலிகள் அவற்றைக் கடித்து வெட்டி துண்டாக்கி விடுகிறது.

இதனால், நெற்பயிர்களை அதிக அளவில் சேதமடைந்து, குறுவை சாகுபடி விளைச்சலே கேள்விகுறியாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter