கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி மற்றும்‌ பப்பாளிப் பழங்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் கீழ்க்கண்ட தலைப்புகளில்‌ நடைபெறுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் மதிப்புக்கூட்டல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி,தக்காளி மற்றும்‌ பப்பாளி பழங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் கீழ்க்கண்ட தலைப்புகளில்‌ நடைபெறுகிறது.

நோனி- பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌

தக்காளி- சாஸ, கெட்சப்‌, பேஸட்‌, பியுரி

பப்பாளி - ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸட்‌, கேண்டி

ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1,770/- (ரூ.1500+ ஜிஎஸ்டி 18%) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பிளசசார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி! மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ - 641 003.

பேருந்து நிறுத்தம்‌ - வாயில்‌ எனர்‌. 7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை, கோயம்புத்தூர்‌-641003.

மேலும்‌ விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌,

கோயம்புத்தூர்-641003.

அலைபேசி எண் - 94885 18268

தொலைப்பேசி எண்‌ - 0422 6611268

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter