உடுமலை கோட்டத்தில் 'புரூசெல்லோசிஸ்' நோய்க்கு தடுப்பூசி முகாம்

உடுமலை கோட்டத்தில் உள்ள கொமரலிங்கம் கால்நடை மருந்தக கட்டுப்பாட்டு கிராமங்களில், நான்கு முதல் எட்டு மாத வயதுள்ள கிடாரி கன்றுகளுக்கு, இலவசமாக 'புரூ செல்லோசிஸ்' தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


உடுமலை: உடுமலை கோட்டத்தில் 50 கிடேரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, புரூ செல்லோசிஸ்'தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டத்தில், 4 முதல் 8 மாத வயதுக்கு உட்பட்ட கிடேரி கன்றுகளுக்கு, 'புரூ செல்லோசிஸ்' தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

'புரூசெல்லோசிஸ்' எனும் கன்று வீச்சு நோய், பாக்டீரியா கிருமிகளால் கால்நடைக்கு ஏற்படுகிறது. கொமரலிங்கம் கால்நடை மருந்தக கட்டுப் பாட்டு கிராமங்களில், நான்கு முதல் எட்டு மாத வயதுள்ள கிடாரி கன்றுகளுக்கு, இலவசமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக, 50 கிடேரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், உதவி இயக்குநர்கள் ஜெயராம், கவுசல்யாதேவி, உதவி மருத்துவர் காதிக்கேயன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு சிவக்குமார், கால்நடை ஆய்வாளர்கள் ஸ்ரீமா, கார்த்திக், உதவியாளர் காந்திஜெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கால்நடைத்துறையினர் கூறுகையில், 'ஒரு முறை தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுதும் எதிர்ப்புத்திறன் வெளிப்படும்,' என்றனர்.

Newsletter