உடுமலை அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

உடுமலை அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்குச் சாம்பா பயிர் செய்துள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு.


திருப்பூர்: உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காகத் நாளை முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பரப்புகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடிக்காக, பிப்.2ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தகுந்த இடைவெளியில் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.



இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter