கோவை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், வரும் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது என கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்பு.


கோவை: கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் வரும் 14ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இம்மாதம் பிப்.1 முதல் வரும் 14ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கோவை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

தங்கள் பகுதியில் நடைபெறும் தேதியை அருகில் உள்ள கால்நடை மருத்துவர் நிலையங்களில் அறிந்து கொண்டு முகாமில் கலந்துகொண்டு கோழிகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி மருந்தினை செலுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter