கோவை வேளாண் பலகலைக்கழகத்தில்‌ தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகத்தில்‌ நடைபெற்ற தேனீ வளர்ப்பு குறித்த இரண்டு நாள்‌ கருத்தரங்கில் தேனின்‌ தரத்தை உயர்த்துவது குறித்தும்‌ தேனிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்‌ பெறுவதைப்‌ பற்றியும்‌ எடுத்துரைப்பு.


கோவை: தேசிய தேனீ வளர்ப்பு வாரியத்தின்‌ நிதி உதவியுடன்‌ தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகத்தில்‌ தேன் வளர்ப்பு குறித்த இரண்டு நாள்‌ கருத்தரங்கு நடைபெறுகிறது.

கோவை மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய இரண்டு நாள்‌ கருத்தரங்கு தேசிய தேனீ வளர்ப்பு வாரியத்தின்‌ நிதி உதவியுடன்‌ இன்று வேளாண்‌ பூச்சியியல்‌ துறை, பயிர்‌ பாதுகாப்பு மையம்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்‌, தேனீ வளர்ப்பு வாரிய இயக்குநர்‌ . வேளாண்‌ மற்றும்‌ தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்கள்‌, தேனீ வளர்ப்போர் மற்றும்‌ தொழில்முனைவோர்கள்‌ அறிவியல்‌ ரீதியாகத் தேனீ வளர்ப்பதில்‌ சிறந்த நுண்ணறிவைப் பெறும்‌ நோக்கத்துடன்‌ இணைக்கப்பட்டனர்‌.

கருத்தரங்கினை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளர்‌ முனைவர்‌ தமிழ்வேந்தன்‌ தலைமையேற்று நடத்தினார்‌. அதில்‌ அவர்‌, தேனீ வளர்ப்பின்‌ முக்கியத்துவத்தையும்‌, தேனின்‌ தேவையை அதிகப்படுத்தவும்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

தேசிய தேனீ வளர்ப்பு வாரியத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌.நவீன்‌ பாட்டில்‌ கருத்தரங்கைத் துவக்கி வைத்து, தேனின்‌ தரத்தை உயர்த்துவது குறித்தும்‌ தேனிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்‌ பெறுவதைப்‌ பற்றியும்‌ விளக்கினார்‌.



கருத்தரங்கின்‌ முக்கியத்துவத்தினை முனைவர்‌ மூ.சாந்தி, இயக்குநர்‌ பயிர்‌ பாதுகாப்பு மையம்‌ விளக்கினார்‌. வேளாண்‌ பூச்சியியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, முனைவர்‌ கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்‌.

Newsletter