கோவை வேளாண் பல்கலை.-யில் வணிக முறையில் காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரித்தல்‌ பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வணிக முறையில் காய்கறி, பழ பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ வணிக முறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரித்தல்‌ பயிற்சி வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சி, காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சியானது வேளாண்மை‌ பொறியியல்‌ கல்லூரியின் அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையத்தில் நடைபெற உள்ளது.

இந்த 2 நாள் பயிற்சியில், கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்‌.

1) உலர வைக்கப்பட்ட காய்கறிகள்‌ மற்றும்‌ ஊறுகாய்‌ (Dehydrated vegetables and fruits)

2) பலவகை பழ ஜாம் (Mixed Fruit Jam)

3) பழரசம் (Squash)

4) தயார் நிலைபானம் (Ready to serve Beverage)

5) ஊறுகாய் (Pickles)

6) ஊறுகனி (Candy)

7) பழப்பார் (Fruit Bar)

8) தக்காளி கெட்சப் (Tomato ketchup)

இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள்‌ (ரூ.1500 +GST 18%) ரூ.1,770-ஐ பயிற்சியின் முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்‌.

பேருந்து நிறுத்தம்‌: வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூர்‌! மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி எண் - 94885 18268, 0422-661268

மின்னஞ்சல் - phtc @ tnau.ac.in

Newsletter