குமரலிங்கம் பகுதியில் நெற்பயிர்களில் குருத்துப்புழு தாக்குதல் அதிகரிப்பு

குமரலிங்கம் பகுதியில் நெற்பயிர்களில் குருத்துப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


திருப்பூர்: மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்சாகுபடி செய்த நிலையில் தற்போது குருத்துப்புழு தாக்குதல் காரணமாக மகசூல் வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்குப் பாசனத்துக்காகத் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.



இந்த தண்ணீரைப் பயன்படுத்தி குமரலிங்கம் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது பயிர்கள் அனைத்தும் குருத்துப்புழு தாக்குதலால் காய்ந்து சேதம் அடைந்து உள்ளது.



இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்து உள்ள நிலையில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.



இதே போல கண்ணாடி புத்தூர், மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்சாகுபடி செய்த நிலையில் தற்போது குருத்துப்புழு தாக்குதல் காரணமாகச் சிவப்பாகவும் பழுப்பு நிறமாகவும் மாறுவதால் மகசூல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் நெற்பயிர்களில் குருத்துப்புழு தாக்குதல் பரவாமல் இருக்க உரியத் தடுப்பு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter