23 புதிய ரகங்கள் இந்தாண்டு வெளியீடு - கோவை வேளாண் பல்கலை. துணை வேந்தர் தகவல்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் கீதாலட்சுமி, இந்தாண்டு 23 புதிய ரகங்கள் வெளியிடப்பட உள்ளது என்றார்.



கோவை: கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.



பண்ணை வளாகத்தில் மஞ்சள், தயிர், பால், கஞ்சி, பன்னீர், கோமியம், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளை பட்டி அமைத்திருந்தனர்.



இதில் துணைவேந்தர் கீதாலட்சுமி மாடுகளை பாரம்பரிய முறைப்படி அழைத்து பட்டியை மிதிக்க வைத்து கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இந்த நிகழ்விற்கு பின் துணை வேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, இந்த ஆண்டு நெல், சிறுதானியம், இயந்திரங்கள் உட்பட இருபத்தி முன்று புதிய வகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் கடந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் நீர்வளம் நன்றாக உள்ளது. இதன் காரணமாக விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter