நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சி - வேளாண் பல்கலை., அறிவிப்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி முகாம், வரும் 11, 12-ம் தேதிகளில் நடக்க உள்ளது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி முகாம், வரும் 11, 12-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இரண்டு நாட்களும் காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ நடைபெறும்‌.

அப்போது, நெல்லி பானங்கள்‌, பழரச பானம்‌ மற்றும்‌ தயா நிலை பானம்,‌ நெல்லி ஜாம், ‌தேன்‌ நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய்‌, பொடி மற்றும்‌ துருவல், தொழில்‌ தொடங்குவதற்கான உரிமம்‌ பெறக்குரிய வழிமுறைகள்‌ உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

பயிற்சி கட்டணமாக ரூ.1770 வசூலிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோவை எனும் முகவரி அல்லது 94885 18268 எனும் செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter