கோவை வேளாண் பல்கலை.-யில் அடுமனைப்‌ பொருட்கள்‌ தயாரிக்கும்‌ 2 நாள் பயிற்சி - டிச.21, 22 தேதிகள் நடக்கிறது

வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அடுமனைப்‌ பொருட்கள்‌ தயாரிக்கும்‌ 2 நாள் பயிற்சியில், ரொட்டி வகைகள்‌, கேக்‌,‌ பிஸ்கட்‌, பப்ஸ்‌, கட்லெட்‌ மற்றும்‌ சமோசா உள்ளிட்டவை தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைப்‌ பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 2 நாள் பயிற்சி வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைத்‌ தொழில்நுட்பம்‌ பற்றிய இரண்டு நாட்கள்‌ பயிற்சி வரும் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அடுமனை உணவுப்‌ பொருட்களுக்கு (Bakery Products) தற்பொழுது மக்கள்‌ மத்தியில்‌, அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக்‌ காரணம்‌ விரும்பத்தக்க வகையிலும்‌ பற்சுவைகளிலும்‌ மிக எளிதில்‌ இவை கிடைப்பதேயாகும்‌.

வளர்ந்து வரும்‌ இவ்வடுமனைத்‌ தொழில்நுட்பங்கள்‌ சிறுதொழில்‌ முனைவோருக்கு தங்களது வருமானத்தைப்‌ பெருக்க பெரிதும்‌ உதவியாக இருக்கும்‌. ஆகவே, கீழ்க்காணும்‌ அடுமனைப்‌ பொருட்களை எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி,

1) ரொட்டி வகைகள்‌

2) கேக்‌ மற்றும்‌ பிஸ்கட்‌

3) பப்ஸ்‌, கட்லெட்‌ மற்றும்‌ சமோசா

உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க ‌ஆர்வம் உள்ளவர்கள்,‌ பயிற்சியின் முதல் நாளன்று, பயிற்சி கட்டணமாக ரூ.1770 (ரூ.1500 + GST 18%) செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர் - 641 003

பேருந்து நிறுத்தம்‌ - வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர் மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641003.

தொலைபேசி எண்‌ - 94885 18268

மின்னஞ்சல்‌ : [email protected]

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter