கோவை வேளாண் பல்கலை.-யில்‌ வரும் 7ஆம் தேதி அங்கக பண்ணைய‌ கட்டணப்‌ பயிற்சி

நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியில், பூச்சி நோய்‌ கட்டுப்பாடு, களை மேலாண்மை, சத்துக்கள்‌ மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்‌ இயங்கி வருகிறது.

இந்நிலையில், நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வரும் 7 ஆம் தேதி ஒரு நாள்‌ கட்டண‌ பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, முனைவர்‌ ரா. கிருஷ்ணன்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின்‌ சார்பில் வரும் 7 ஆம் தேதி ௮ங்கக பண்ணைய கட்டண பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்த ஒரு நாள்‌ கட்டணப்‌ பயிற்சியில்‌ ௮ங்கக வேளாண்மையில்‌ பூச்சி நோய்‌ கட்டுப்பாடு, களை மேலாண்மை, சத்துக்கள்‌ மேலாண்மை மற்றும்‌ அங்கக வேளாண்‌ விளைபொருட்களை சந்தைப்படுத்துதல்‌ குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும், அங்கக இடுபொருள்‌ தயாரிப்பு முறைகளும்‌ செய்முறைப்‌ பயிற்சியாக கொடுக்கப்படும் என்றும்,‌ அங்கக வேளாண்மை குறித்த புத்தகம்‌ ஒன்றும்‌ வழங்கப்படும்‌.

பயிற்சியில் பங்கேற்கும் நபர்கள் பயிற்சி கட்டணம் மற்றும் வரி உட்பட ரூ.590 செலுத்த வேண்டும். கட்டணத்தை 38918523789 என்ற பாரத ஸ்டேட்‌ வங்கி கணக்கில்‌ செலுத்தி ரசீதை பயிற்சியின்‌ போது கொண்டு வர வேண்டும்‌.

பயிற்சியில்‌ கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்‌. முன்பதிவு செய்வதற்கும்‌ மற்றும்‌ தகவல்களுக்கு 9486734404 என்ற தொலைபேசி எண் மூலம் ஆராய்ச்சி மையத்தின்‌ பேராசிரியர்‌ மு.ராமசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter