வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தில் இணைந்த‌ நபார்டு வங்கி - தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை.-யில் கடந்த 28,29 தேதிகளில் நடைபெற்ற கண்டுநர் பயிற்சியில்‌ நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் உட்பட 28 பேர் கலந்துகொண்டதாக அறிக்கை வெளியீடு.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 28,29 தேதிகளில் நடைபெற்ற கண்டுநர் பயிற்சியில்‌ நபார்டு வங்கி தலைமை பொதுமேலாளர் உட்பட 28 பேர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்ற இரண்டு நாள்‌ (28.11.2022 மற்றும்‌ 29.11.2022) கண்டுநர் பயிற்சியில்‌ தேசிய வேளாண்‌ வளர்ச்சி வங்கியின்‌ தலைமை பொது மேலாளர், பொது மேலாளர்கள்‌ மற்றும்‌ மாவட்ட வளாச்சி அலுவலர்கள்‌ உட்பட 28 பேர் கலந்து கொண்டனர்‌.



இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற நபார்டு வங்கி கூட்டத்தில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.வெ.கீதாலட்சுமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழத்தில்‌ செயல்படுத்தப்பட்ட இயற்கை வள மேலாண்மை, விவசாய உற்பத்தித்திறன்‌ அதிகரிப்பு, நிலைத்தன்மை, விவசாயிகளின்‌ வாழ்க்கைத்‌ தரத்தை மேம்படுத்துதல்‌, விவசாய மற்றும்‌ கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்லூரிகளில்‌ உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு செயல்‌ திட்டங்கள்‌ இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின்‌ அங்கீகாரத்தைப்‌ பெற உதவியது.

இதனையடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலை கழகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ பல்வேறு துறைகளில்‌ நபார்டு வங்கியின்‌ நிதியுதவிடன்‌ செயல்படுத்தப்படும்‌ கீழ்க்கண்ட செயல்பாடுகள்‌ பற்றி எடுத்துரைத்தார்.

1) பழங்குடியினருக்கு ஆடு வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்பு, உரம்‌ உற்பத்தி, பட்டு வளர்ப்பு, வேளாண்‌ சுற்றச்சூழல்‌ அமைப்பு பகுப்பாய்வு, மீன்வளம்‌, ஹைட்ரோபோனிக்‌ தீவன உற்பத்தி, ஒருங்கிணைந்த பண்ணையம்‌, நெல்‌ வயலில்‌ மீன்‌ வளர்ப்பு, தொழில்முனைவு மற்றும்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ மதிப்பு கூட்டல்‌ திட்டம்‌.

2) தொழில்முனைவு மற்றும்‌ திறன்‌ மேம்பாடு திட்டம்‌

3) நிலக்கடலைக்கான சமச்சீர் ஊட்டச்சத்தை அடைய நானோ ஃபைபர் அடிப்படையிலான ஊட்டச்சத்து விநியோகத்தை மேம்படுத்துதல்‌ போன்ற திட்டத்தின்‌ மூலம்‌ எலக்ட்ரோஸ்‌ பின்னிங்‌ மோனோ ஆக்சியல்‌ முறை கையாளப்பட்டு பல ஊட்டச்சத்து மற்றும்‌ மக்கும்‌ பாலிமா ஆகியவற்றின்‌ கலவையால்‌ நானோ ஃபைபா வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.

4) தஞ்சாவூர்‌, திருவாரூர், நாகப்பட்டினம்‌ மற்றும்‌ கடலூர் மாவட்டங்களிலுள்ள 18 இடங்களில்‌ கருப்பு கவுனியில்‌ வயல்வெளி ஆய்வு மற்றும்‌ விவசாயிகளுக்கு கவுனி நெல்‌ மற்றும்‌ அதன்‌ விதை உற்பத்தி குறித்து ஆறு ஒரு நாள்‌ பயிற்சிகள்‌ நடத்தப்பட்டு 175 விவசாயிகள்‌ பயனடைந்தனர்.

5) பல்வேறு மாநாடுகள்‌, பணிமனைகளுக்கு பல நிதியளித்துள்ளது.

6) மும்பையிலுள்ள நபார்டு தலைமை அலுவலகம்‌, மழைநீர்‌ மற்றும்‌ மழை மற்றும்‌ நீர் சேமிப்பு தொட்டி தமிழ்நாட்டில்‌ உள்ள தொட்டி அடுக்கு அணுகுமுறையை பயன்படுத்தி செயல்திறனை மறுபரிசீலனை செய்தல்‌ மற்றும்‌ டேங்க்‌ ஸ்டோரேஜ்‌ பேட்டான்‌ ஆராய்ச்சித்‌ திட்டத்தின்‌ வாயிலாக 28 லட்சத்தில்‌ நிதியளித்தது.

7) தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகமானது சந்தை சார்ந்த வணிகத்திட்டம்‌, விவசாய செயல்முறைகள்‌, அறுவடைசார் தொழில்நுட்பங்கள்‌ மற்றும்‌ சந்தை இணைப்புகள்‌ ஆகியவற்றின்‌ வழிகாட்டுதலுக்கான உழவர்‌ உற்பத்தியாளர் அமைப்புடனான அதன்‌ தொடர்பை வலுப்படுத்துவதற்கான கொள்கையை உருவாக்கியுள்ளது.

8) வேளாண்‌ கல்லாரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ நவம்பர் 25 அன்று நடைபெற்ற 86 வது வேளாண்‌ விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ விரிவாக்க அலுவலர்கள்‌ மாநாட்டில்‌ ஐந்து உழவர் உற்பத்தியின்‌ அமைப்புகளுடன்‌, சமீபத்தில்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வுக்காக ஒரு கட்டமைக்கப்பட்ட கூட்டத்தை நபார்டு பரிசீலிக்க வேண்டும்‌.

கடந்த இருபது ஆண்டுகளில்‌ நபார்டு வங்கியில்‌ இருந்து பெரும்‌ நிதியுதவியானது தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள நானோ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ மேம்பாட்டு மையத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கி மூலம்‌ பெரும்‌ அளவில்‌ நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள்‌

* பண்ணை துறை ஊக்குவிப்பு நிதி

* தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான திறன்‌ மேம்பாடு

* ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டு நிதி

* உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உறுப்பினர்களை சந்தை மற்றும்‌ செயலாக்க அலகுகளை பார்வையிட ஏற்பாடு செய்தல்‌

* வேளாண்‌ மற்றும்‌ ஊரக வளர்ச்சி மையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ விவசாயம்‌ மற்றும்‌ கிராமப்புற மேம்பாடுகளை உள்ளடக்கிய பல்வேறு குறைகள்‌ மற்றும்‌ கொள்கை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில்‌ ஈடுபட்டுள்ளது. விவசாய வளர்ச்சியின்‌ சமூக பொருளாதார அம்சங்களில்‌ கொள்கை சார்ந்த ஆராய்ச்சியை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



இக்கூட்டத்தில்‌ நபார்டு வங்கியின்‌ தலைமை பொது மேலாளர்‌ டி.வெங்கடகிருஷ்ணா பேசியதாவது, நீர்வடி உப திட்டம்‌ மற்றும்‌ திறனாய்வு பயிற்சியின்‌ மூலம்‌ விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை உயர்த்த பல்கலைக்கழகத்துடன்‌ இணைந்து செயல்படுவதில்‌ முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

அண்மையில்‌ நடைபெற்ற மாநில அளவிலான உழவா்‌ தினவிழாவில்‌ 27,000 விவசாயிகள்‌ மற்றும்‌ 4200 மாணவாகள்‌ நபார்டு வங்கியின்‌ நிதி உதவியுடன்‌ வெற்றிகரமாக பங்கு பெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் முனைவா்‌ கே. இன்கரசல்‌, நபார்டு வங்கி பொதுமேலாளர் என்‌. நீரஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக வேளாண்‌ ஆராய்ச்சி இயக்குநர், விரிவாக்கக்‌ கல்வி இயக்குநர், பேராசிரியர் மற்றும்‌ தலைவர், பயிற்சித்துறை, ஆகியோர்‌ ஒருங்கிணைத்தனர்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter