கோவை வேளாண் பல்கலை-யில் வேளாண்மையில்‌ மரபணு திருத்தம் குறித்த கருத்தரங்கம்‌

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்ற வேளாண்மையில்‌ மரபணு திருத்தம் மற்றும் அதனை செயல்படுத்தும்‌ கொள்கைகள்‌ குறித்த கருத்தரங்கில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை வணிகமயமாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிர்த்‌ தொழில்நுட்ப மையம்‌ மற்றும்‌ டெல்லி உயிர்தொழில்நுட்ப கூட்டமைப்பு இந்தியா நிறுவனம் சார்பில் “வேளாண்மையில்‌ மரபணு திருத்தம்‌: வாய்ப்புகள்‌ மற்றும்‌ செயல்படுத்தும்‌ கொள்கைகள்‌” பற்றிய ஒருநாள்‌ கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில்‌ பல்வேறு ஆராய்ச்சி நிலையங்கள்‌ மற்றும்‌ நிறுவனத்தின்‌ விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ மாணவர்கள் கலந்து கொண்டனர்.



விழாவில் பேசிய தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரித்‌ தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர் செந்தில், மரபணு திருத்த முறையில்‌ பல்வேறு பயிர்களில்‌ சடுதிமாற்றம்‌ நிகழ்த்துவதற்கான முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்‌.



நிகழ்ச்சியில் பேசிய உயிர்தொழில்நுட்ப கூட்டமைப்பு இந்தியா நிறுவனத்தின்‌ தலைமை மேலாளர்‌ முனைவர் விபா அஹுஜா, மருத்துவம்‌ மற்றும்‌ வேளாண்‌ துறையில்‌ மரபணு திருத்தத்திற்கான முக்கியத்துவத்தை பற்றி வலியுறுத்தினார்‌. மேலும்‌, உயிர்தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனத்தின்‌ பல்வேறு செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்தார்‌.



அவரைதொடர்ந்து பேசிய சேலம்‌, ஆத்தார்‌, இராசி விதை நிறுவனத்தின்‌ தலைவர் முனைவர் இராமசாமி, உணவு மற்றும்‌ பணப்பயிர்களின்‌ உற்பத்தி மற்றும்‌ உற்பத்தி திறனில்‌ ஏற்பட்டுள்ள இடைவெளிகளை மேற்கோள்காட்டினார். மேலும்‌ மரபணு திருத்த முறையானது வேளாண்‌ உற்பத்தியில்‌ வளாந்து வரும்‌ மிக முக்கிய தொழில்நுட்பம்‌ எனவும்‌ மரபணு திருத்தம்‌ செய்யப்பட்ட பயிர்களை வணிகமயமாக்குவதற்கான முக்கியத்துவத்தை பற்றியும்‌ விளக்கினார்.

விழாவில் தாவர உயிர்‌ தொழில்நுட்பவியல்‌ துறை தலைவா்‌ முனைவர்‌ கோகிலாதேவி, பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter