தக்காளி, வெண்டை, கத்தரிக்காய்-க்கான தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்ட விலை முன்னறிவிப்பு வெளியீடு

விலை முன்னறிவிப்பின் படி, தரமான தக்காளியின்‌ பண்ணை விலை கிலோ ரூ.20 - ரூ.22, நல்ல தரமான கத்திரிக்காய்‌ விலை ரூ.23 -‌ ரூ.25 மற்றும்‌ தரமான வெண்டைக்காய்‌ விலை ரூ.21-ரூ.23 வரை ஆக இருக்கும் என அறிவிப்பு.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் இயங்கி வரும் பாசன விவசாய மேம்பாட்டு திட்ட விலை முன்னறிவிப்பு திட்டத்தின் கீழ் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வெளியிடப்பட்டுள்ள விலை முன்னறிவிப்பு அறிக்கையில், விவசாயிகள்‌ தங்கள்‌ நடவு முடிவுகளை மேற்கொள்வதற்கு எதுவாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வழங்குகிறது.

தக்காளி, கத்திரிக்காய்‌ மற்றும்‌ வெண்டைக்காய்‌ உற்பத்தி மற்றும்‌ பயன்பாட்டில்‌ தமிழகம்‌ முக்கிய இடம்‌ வகிக்கின்றது. இந்த காய்கறிகளுக்கான அறுவடைக்கு முந்தைய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி

வேளாண்‌ மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), தமிழகத்தில்‌ தக்காளி சுமார்‌ 0.45 லட்சம்‌ ஹெக்டர்‌ பரப்பில்‌ பயிரிடப்பட்டு 14.89 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ கிருஷ்ணகிரி, நாமக்கல்‌, தர்மபுரி, திண்டுக்கல்‌, தேனி மற்றும்‌ திருப்பூர்‌ ஆகிய மாவட்டங்கள்‌ தக்காளி உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌.

தற்போது கோவை மொத்தவிலை சந்தைக்கு தக்காளி அதன்‌ சுற்றுவட்டார கிராமங்களான கிணத்துக்கடவு, சாவடி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர்‌, பெரியநாயக்கன் பாளையம்‌ மற்றும்‌ கர்நாடக மாநிலம்‌ திம்பம்‌ மற்றும்‌ தாளவாடு ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது.

வர்த்தக மூலங்களின்படி, தற்போதைய சந்தை நிலவரப்படி தக்காளியின்‌ வரத்து அதிகமாக இருப்பதால்‌ பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று அறியப்படுகிறது.

கத்தரிக்காய்

வேளாண்மை மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), கத்திரிக்காய்‌ 0.27 லட்சம்‌ ஹெக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 3.52 லட்ச டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.

தமிழகத்தில்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ வேலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ கத்திரிக்காய்‌ அதிக அளவில்‌ உற்பத்தி செய்யப்படுகின்றது.

வர்த்தக மூலங்களின்படி, தற்போதைய வரத்து செஞ்சேரிமலை, உடுமலைப்பேட்டை, நாச்சிபாளையம்‌, ஆலந்துறை, மற்றும்‌ கர்நாடக மாநிலம்‌ மைசூருலிருந்து வருகிறது.

வெண்டை

வேளாண்மை மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), வெண்டை 0.23 லட்சம்‌ ஹெக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 2.08 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.

தமிழகத்தில்‌, சேலம்‌, தேனி, தர்மபுரி, திருவள்ளூர்‌, கோயம்புத்தூர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்‌ வெண்டை அதிக அளவில்‌ உற்பத்தி செய்யப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி, தற்போது, கோயம்புத்தூர்‌ சந்தைக்கு வெண்டை வரத்தானது செஞ்சேரிமலை மற்றும்‌ உடுமலைபேட்டைலிருந்து வருகிறது.

விலை முன்னறிவிப்பு திட்டக்குழு, ஒட்டச்சத்திரம்‌ மற்றும்‌ கோயம்பத்தூர்‌ சந்தையில்‌ கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை விலையில்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வு முடிவின்படி, அறுவடையின்‌ போது (டிசம்பர்‌ 2022) தரமான தக்காளியின்‌ பண்ணை விலை கிலோவிற்கு ரூ.20 முதல்‌ 22 வரை, நல்ல தரமான கத்திரியின்‌ விலை ரூ.23 முதல்‌ 25 ஆகவும்‌ மற்றும்‌ தரமான வெண்டையின்‌ விலை ரூ.21 முதல்‌ 23 வரை ஆக இருக்கும்‌ என்று அறியப்படுகிறது.

இதை தொடர்ந்து பருவ மழை மற்றும்‌ அண்டை மாநிலங்களிலிருந்து சந்தைக்கு வரத்து அதிகரிக்கும்‌ காரணத்தால்‌ விலை ஏற்ற இறக்கமாக காணப்படும்‌. இதன்‌ காரணமாக விவசாயிகள்‌ அதற்கு ஏற்ப சந்தை முடிவு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. à®‡à®µà¯à®µà®¾à®±à¯ அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ விவரங்களுக்கு:

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தை தகவல்‌ மையம்‌,

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர் ‌- 641 003.

தொலை பேசி - 0422 - 243140.

இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி

தமிழ்நாடு நீர்வள நிலவளத்‌ திட்டம்‌

நீர்‌ நுட்ப மையம்‌

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலைபேசி - 0422-6611278

தொழில்‌ நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

காய்கறிப்‌ பயிர்கள்‌ துறை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலைபேசி - 0422-6611374

ஆகிய முகவரிகள் மற்றும் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Newsletter