கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இந்திய வேளாண் பொறியாளர்‌ சங்கத்தின்‌ 56வது வருடாந்திர மாநாட்டின்‌ கண்ணோட்டம்‌ நடைபெற்றது

கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இன்று நடைபெற்ற வேளாண்மைப்‌ பொறியியல்‌ பற்றிய ஆராய்ச்சியானது வேலை வாய்ப்பை வழங்குவதற்கும்‌, உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான ஆராய்ச்சி கருத்துக்களைப்‌ பரிமாறிக்‌ கொள்ளும் தளமாக அமைந்தது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “உலகளாவிய உணவு பாதுகாப்பிற்கான வேளாண்‌ பொறியியல்‌ புதுமை” மற்றும்‌ “2047ல்‌ இந்திய வேளாண்‌ பொறியியல்‌ கண்ணோட்டம்‌” ஆகிய தலைப்புகளில்‌ சர்வதேச கருத்தரங்கத்தின்‌ துவக்க விழா நவம்பர்‌ 9-11, 2022 ஆகிய தேதியில்‌ நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்தில்‌ கோயமுத்தூர்‌ வேளாண் பொறியாளர்கள்‌ சங்கம்‌ மற்றும்‌ வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌ இணைந்து மாறி வரும்‌ காலநிலை குழலில்‌ உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கருத்துரையாடலில்‌ பங்கேற்றது.

மேலும்‌ இம்மாநாட்டில்‌ மூன்று நாட்களில்‌ 4 கருப்பொருட்களின்‌ கீழ்‌ 18 அமர்வுகளில்‌ நடைபெற உள்ளது. சுமார்‌ 750 ஆராய்ச்சி சுருக்கங்கள்‌ பெறப்பட்டன.

முனைவர்‌.à®…. ரவிராஜ்‌, முதன்மையர்‌ மற்றும்‌ ஒருங்கிணைப்பாளர்‌ (56th ISAE Annual convention), வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ மற்றும்‌ குழுவினர்‌ இந்நிகழ்வை சிறப்பான முறையில்‌ நடத்த திட்டமிட்டுள்ளனர்‌. அண்ணா கலையரங்களில்‌ 09.17.2022-ல்‌ மாநாட்டின்‌ துவக்க விழாவில்‌ நடைபெற்ற நிகழ்வுகள்‌.

முனைவர்‌. கிமானசுபதக்‌, தலைமை இயக்குநர்‌ (ICAR) மற்றும்‌ செயலாளர்‌ (DARE), சிறப்பு விருந்தினராக காணொளி மூலம்‌ கலந்துகொண்டார்‌. சி. சுமயமூர்த்தி வேளான்‌ உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ தமிழ்நாடு அரசின்‌ வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை செயலாளர்‌ காணொளி மூலம்‌ கெளரவ விருந்தினராக கலந்துகொண்டார்‌.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ (முனைவர்‌. வெ.கீதாலட்சுமி மாநாட்டை துவக்கிவைத்தார்‌. முனைவர்‌. சியாம்‌ நாராயணர்‌ ஜா, தலைவர்‌ (ISAE) மற்றும்‌ துணை இயக்குநர்‌ ஜெனரல்‌ (ICAR), புது தில்லி தலைமையுரையாற்றினார்‌.



வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராயச்சி நிலையத்தின்‌ முதன்மையர்‌ மற்றும்‌ ஒருங்கிணைப்பாளர்‌ (56th ISAE Annual Convention) முனைவர்‌. ௮. ரவிராஜ்‌ வரவேற்புரை வழங்கினார்‌. முனைவர்‌. பி.கே. ஷாகு, பொதுசெயலாளர்‌ (ISAE) நன்றியுரை வழங்கினார்‌.

முனைவர்.ப. ராஜ்குமார்‌, முதன்மையர்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, குமுளுர்‌ இத்துவக்கவிழாவில்‌ கலந்துகொண்டார்‌.

இத்தொடக்கவிழாவைத்‌ தொடர்ந்து வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனத்தில்‌ புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய அரசின்‌ உணவு பதப்படுத்தும்‌ தொழில்‌ துறை அமைச்சகத்தின்‌ நிதியுதவியுடன்‌ குறு உணவு பதப்படுத்தும்‌ நிறுவனங்களை முறைப் படுத்துவதற்கான பிரதமமந்திரி திட்டத்தின்‌ கீழ்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனத்தில்‌ தேங்காய் பதப்படுத்துதலுக்கான தொழில்‌ நுட்பவழி காட்டுதல்‌ மற்றும்‌ தேவை அடிப்படையிலான ஆராய்ச்சி தலையீடுகளை வழங்குவதற்கான தென்னைப்‌ பொருட்களுக்கான வேளாண் பொறியியல்‌ தொழில்‌ முனைவோர்‌ மையம்‌ மற்றும்‌ வேளாணர்‌ பொறியியல்‌ தொழில்‌ கண்காட்சி தொடக்கிவைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.



வேளாண்மைப்‌ பொறியியல்‌ அறிவியலார்‌, ஆராய்ச்சி மாணவர்கள்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ உள்ளிட்ட 500க்கும்‌ மேற்பட்ட வல்லுநர்கள்‌ நேரடி மற்றும்‌ காணொலி மூலமாகவும் கலந்துகொண்டனர்‌. இந்த நிகழ்வு, வேளாண்மைப்‌ பொறியியல்‌ பற்றிய ஆராய்ச்சியில்‌ வேலைவாய்ப்பை வழங்குவதற்கும்‌, உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்‌, ஆராய்ச்சி கருத்துக்களைப்‌ பரிமாறிக்‌ கொள்வதற்கும்‌ மற்றும்‌ பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும்‌ ஒரு தளமாக இருக்கும்‌.

இதன்‌ பின்னர்‌ நடந்த செய்தியாளர்‌ பேட்டியில்‌ எழுப்பட்ட வேளாணர்‌ பொறியியல்‌ சார்ந்த வினாக்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக்கத்தின்‌ துணைவேந்தர்‌ (முனைவர்‌. வெ.கீதாலட்சுமி, பதிலளித்தார்‌. அதன்‌ பின்னர்‌ இந்திய வேளாளர்‌ பொறியாளர்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ முனைவர்‌. சியாம்‌ நாராயணர்‌ ஜா, தலைவர்‌ இந்திய வேளாண்‌ பொறியாளர்‌ சங்கத்தின்‌ நோக்கத்தைப்‌ பற்றியும்‌, இச்சங்கத்தில்‌ உள்‌ நாட்டு மற்றும்‌ வெளிநாடு உறுப்பினர்களாக உள்ளதாகவும்‌ குறிப்பிட்டார்‌.

Newsletter