தமிழ்நாடு வேளாண் பல்கலை.-யில் காரீஃப் பருவ தீவனப்பயிர்‌ தின விழா - கால்நடை விவசாயிகள், மாணவர்கள் பங்கேற்பு

விழாவை பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌. வெ. கீதாலட்சுமி தொடங்கி வைத்தார். இதில், 60க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள், ஆவின்‌, ஹட்சன்‌, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ உள்ளிட்ட பலர் பங்கேற்று பயனடைந்தனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின் தீவனப்பயிர் துறை சார்பில் நடைபெற்ற காரீஃப் பருவ தீவனப்பயிர்‌ தின விழாவில், 60க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் பயிரிடும் விவசாயப் பயிர்களை காரீஃப் பயிர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின் தீவனப்பயிர்‌ துறையில்‌ கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி காரீஃப்‌ பருவ தீவனப்பயிர்‌ தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பயிர்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல்‌ மைய‌ இயக்குநர்‌ முனைவர்‌. இரா. ரவிகேசவன்‌ வருகை தந்த விவசாய பெருமக்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்‌.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌. வெ. கீதாலட்சுமி இந்த விழாவை தொடங்கி வைத்து, கால்நடை பராமரிப்பில்‌ பசுந்தீவனத்தின்‌ முக்கியத்துவம் மற்றும் அதனை சார்ந்த விவசாயிகளின்‌ வாழ்வாதாரம் குறித்தும் தொடக்க உரையாற்றினார்.

மேலும் தனது உரையில்‌ தமிழ் நாட்டின்‌ பால்‌ உற்பத்தி திறனை பற்றி விளக்கிய அவர், தமிழ்நாட்டில்‌ கால்நடைகளின்‌ எண்ணிக்கை 5360 லட்சமாக உள்ளது. பால் உற்பத்தி நாள்‌ ஒன்றுக்கு 206 லட்சம்‌ லிட்டர்‌ ஆகும்‌. இதில்‌ சுமார்‌ 90 விழுக்காடு சிறு, குறு மற்றும்‌ நிலமற்ற விவசாயிகளால்‌ உற்பத்தி செயயப்படுகிறது. தற்போதைய பால்‌ உற்பத்தி திறன்‌ நான்கு விழுக்காடு ஆகும்‌.

இதனை கறவை மாடுகளுக்கு சத்தான மற்றும்‌ சமச்சீரான தீவனப்‌ பயிர்களை அளிப்பதன்‌ மூலம்‌ ஏழு விழுக்காடாக உயர்த்த முடியும்‌. இந்த பயிற்சியானது இந்த இலக்கினை அடைய வழிவகை செய்யும் என்றும் கூறினார்.

இந்நிலையில், பயிர்‌ மேலாண்மை இயக்குநர்‌ முனைவர்‌. மு.க.கலாராணி‌, பயிர்‌ பாதுகாப்பு இயக்குநர்‌ முனைவர்‌.மூ.சாந்தி மற்றும்‌ முனைவர்‌. இர.பெருமாள்சாமி, மண்டல இணை இயக்குநர்‌, கால்நடை பராமரிப்பு துறை ஆகியோர்‌ வாழ்த்துரை வழங்கினர்.

தீவனப்பயிர்‌ துறை தலைவரும் பேராசிரியருமான முனைவர்‌ கா.ந.கணேசன், இந்த தொழில்‌ நுட்ப பயிற்சியில்‌ கலந்து கொண்டவர்களுக்கு நன்றியுரையாற்றினார்‌. இப்பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை தீவனப்பயிர்‌ துறை விஞ்ஞானிகள்‌ திறம்பட ஏற்பாடு செய்திருந்ததாகவும் பாராட்டினார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ அறுபதுக்கும்‌ மேற்பட்ட கால்நடை விவசாயிகள்‌, ஆவின்‌, ஹட்சன்‌, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ பங்கேற்று பயனடைந்தனர்‌.

Newsletter