கோவை வேளாண் பல்கலை-யில் வரும் 15, 16 தேதிகளில் சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி..!

இந்த 2 நாள் பயிற்சியில் சிறுதானிய பொருட்களில் இருந்து பாரம்பரிய உணவுகள்‌, அடுமனைப் பொருட்கள்‌, உடனடி தயார்நிலை உணவுகள்‌ தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்‌ - 0422 -6611268.


கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத்‌ தயாரிக்கும்‌ இரண்டு நாள்‌ பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப பல்கலைக்கழகத்தில்‌ வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

சிறுதானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம்‌, சாமை, தினை மற்றும் பனிவரகு போன்ற சிறு தானிய வகைகளில்‌ உள்ள சத்துக்களையும்‌ அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும்‌ கீழ்க்காணும்‌ மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள்‌ பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

* பாரம்பரிய உணவுகள்‌

* பிழிதல்‌

* அடுமனைப் பொருட்கள்‌

* உடனடி தயார்நிலை உணவுகள்‌

உள்ளிட்டவற்றை எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்தொழில்நுட்ப பயிற்சிகளை பெற ஆர்வமுள்ள தொழில்முனைவோர்‌ மற்றும் ஏனைய ஆர்வலர்கள்‌ ரூ.1,770/- (ரூ.1,500 + 18% GST) செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌.

வேளாண்‌ பொறியியல்‌ கலலூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோவை - 641 003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி! மற்றும்‌ ஆராயச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌- 641 003

தொலை பேசி எண்‌ - 0422 -6611268

Newsletter