தமிழ்நாடு வேளாண்‌ பல்கலை.-யில்‌ ஒட்டுண்ணிகள்‌ மற்றும்‌ இரை விழுங்கிகள்‌ வளர்ப்பு முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல்‌ துறை சார்பில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி ஒட்டுண்ணிகள்‌ மற்றும்‌ இரை விழுங்கிகள்‌ வளர்ப்பு முறைகள் குறித்த சிறப்பு பயிற்சிக்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில பூச்சியியல்‌ துறை மூலமாக “ஒட்டுண்ணிகள்‌ மற்றும்‌ இரை விழுங்கிகள்‌ வளர்ப்பு மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறைகள்‌” பற்றிய ஒரு நாள்‌ பயிற்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த பயிற்சியின்‌ முக்கிய அம்சங்கள் பின்வருமாறு...

1) ஒட்டுண்ணி வகைகள்‌

2) ஊர்வன‌ விழுங்கிகள்‌ / இரை விழுங்கிகள்‌

3) நெல்‌ அந்துப்பூச்சி வளர்ப்பு முறை

4) டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு

5) புழு ஒட்டுண்ணி வளர்ப்பு

6) கண்ணாடி இறக்கைப்‌ பூச்சி வளர்த்தல்‌

7) பொறிவண்டு வளர்ப்பு

8) பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி அசரோபகஸ்‌ வளர்ப்பு

9) பயிர்‌ பாதுகாப்பில்‌ ஒட்டுண்ணிகள்‌ மற்றும்‌ இரை விழுங்கிகள்‌ பயன்பாடு

உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில்‌ கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று காலை 9.00 மணிக்குள்ளாக பூச்சியியல்‌ துறைக்கு தங்கள்‌ செலவில்‌ வந்து சேர வேண்டும்.

இந்த பயிற்சியில்‌ கலந்து கொள்வதற்கு கட்டணமாக ரூ.900 வசூலிக்கப்படும். அதனை நேரடியாக பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்‌ விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, வேளான்‌ பூச்சியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூா்‌-641 003.

தொலைபேசி எண்‌: 0422-6611214, 0422-6611414

மின்னஞ்சல்: [email protected]

Newsletter