தோசை, அடை மிக்ஸ் என பல தயார் நிலை உணவுகள் தயாரிப்பு குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ பயிற்சி முகாம்

இரண்டு நாள் பயிற்சி முகாமில் பல்வேறு தயார்நிலை உணவுகளை எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0422-6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ தயார்நிலை உணவுகள்‌ தயாரித்தல்‌ குறித்த 2 நாட்கள்‌ பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெறவுள்ளது.

வரும் 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 தேதிகளில் காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் பல்வேறு தயார் நிலை உணவுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி அளிக்கப்படும் உணவுகளின் பட்டியல்:

தோசை மிக்ஸ்‌

அடை மிக்ஸ்‌

டேக்ளா மிக்ஸ்‌

பிசிபெலா பாத்‌ மிக்ஸ்‌

கீர் மிக்ஸ்‌

குளோப்‌ ஜாமூன்‌ மிக்ஸ்‌

ஐஸ்கீரிம்‌ மிக்ஸ்‌

தக்காளி சாதம்‌ மிக்ஸ்‌

சூப் மிக்ஸ்‌, என பல்வேறு தயார் நிலை உணவுகளை எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்ப பயிற்சியில் பங்குபெற‌ ஆர்வம் உள்ளவர்கள்‌ ரூ.1770 (ரூ.1500 *- GST 18%) பயிற்சியின் முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நடைபெறும் இடம்‌:

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்சசி நிலையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர் - 641 003.

பேருந்து நிறுத்தம்‌: வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

பேராசிரியர் - தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, கோவை

தொலைபேசி எண்‌ 0422-6611268.

மின்னஞ்சல்‌: [email protected]

Newsletter