பேக்கரி தொழில் தொடங்க வேண்டுமா.? அப்போ.. கோவை TNAU-வின் இரண்டு நாள் பயிற்சியில் கலந்துக்கோங்க..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைத்‌ தொழில்நுட்பம்‌ (பேக்கரி) பற்றிய இரண்டு நாட்கள்‌ பயிற்சி பல்கலைக்கழகத்தில்‌ வருகிற 16.08.2022 மற்றும்‌ 17.08.2022 தேதிகளில் நடைபெறுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைத்‌ தொழில்நுட்பம்‌ பற்றிய இரண்டு நாட்கள்‌ பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வருகிற 16.08.2022 மற்றும்‌ 17.08.2022 தேதிகளில் நடைபெறுகிறது.

அடுமனை உணவுப்‌ பொருட்களுக்கு (Bakery Products) தற்பொழுது மக்கள்‌ மத்தியில்‌, அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக்‌ காரணம்‌ விரும்பத்தக்க வகையிலும்‌ பற்சுவைகளிலும்‌ மிக எளிதில்‌ இவை கிடைப்பதேயாகும்‌. வளர்ந்து வரும்‌ இவ்வடுமனை‌ தொழில்நுட்பங்கள்‌ சிறுதொழில்‌ முனைவோருக்கு தங்களது வருமானத்தைப்‌ பெருக்க பெரிதும்‌ உதவியாக இருக்கும்‌. ஆகவே, பயிற்சியின்போது கீழ்க்காணும்‌ அடுமனைப்‌ பொருட்களான,

*ரொட்டி வகைகள்‌

*கேக்‌ மற்றும்‌ பிஸ்கட்‌

*பப்ஸ்‌, கட்லெட்‌ மற்றும்‌ சமோசா

எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ளவாகள்‌ ரூ.1770(ரூ.1500 + GST 18%) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்- 641 003.

பேருந்து நிறுத்தம்‌: வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641 003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர் மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌,

கோயம்புத்தூர்‌ தொலைபேசி எண்‌ 0422-6611268.

மின்னஞ்சல்‌: [email protected].

Newsletter