உளுந்து விலை இம்மாதம் கிலோவிற்கு ரூ.64-67 -தமிழ்நாடு வேளாண் ஆய்வில் தகவல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், ஊரக மேம்பாடுஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டத்தில் மூலம் உளுந்து விலை
ஆய்வு செய்யப்பட்டதில் ­à®•ுறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில், பயிரிடப்படும் பருப்பு வகைகளில் உளுந்து முக்கியப் பயிராகும். பொருளியல் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்தின் படி, 2015-16 ஆம் ஆண்டில் உளுந்து 39.6 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 22 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 2014-15 ஆம் ஆண்டில் உளுந்து 4 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 2.65 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் உளுந்து பயிரிடும் முக்கிய மாவட்டங்களாகும்.

இந்தியாவில், 2015-16 ஆம் ஆண்டில் மொத்தப் பருப்பு உற்பத்தி 17.06 மில்லியன் டன்கள் ஆகும்.  ஆனால் உள்நாட்டு நுகர்வு சுமார் 22-23 மில்லியன் டன்களாக உள்ளது. எனவே, உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் பருப்பு வகைகளை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்தியா ஆண்டுதோறும் 1.5 மில்லியன் டன்களுக்கு மேல் உளுந்து உற்பத்தி செய்து, அதன் முழு உற்பத்தியையும் நுகர்வு செய்கிறது.  2015-16 ஆம் ஆண்டில் ரூபாய் 89.7கோடி மதிப்புள்ள உளுந்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. மியான்மாரிலிருந்து மட்டும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உளுந்தின் மதிப்பு மற்றும் அளவு மொத்த இறக்குமதியின் முறையே 98.9 சதவீதம் மற்றும் 90.8 சதவீதம் ஆகும். மியான்மரைத் தொடர்ந்து வியட்நாம் அதிகஅளவு உளுந்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறது.

வர்த்தக மூலங்களின் படி, உளுந்து வரத்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத் தொடங்கியுள்ளது. இவ்வரத்து அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். கரீப் பருவத்தில், ஆந்திரப்பிரதேசத்தில் அதிக வறட்சி மற்றும் தண்ணீர்ப் பற்றாக் குறையால் உற்பத்தி குறைந்துள்ளது.

இச்சூழலில், விவசாயிகள் ஏதுவாக முடிவுகளை எடுக்க கடந்த 15 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நிலவிய உளுந்தின் பண்ணை விலையை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், ஊரக மேம்பாடுஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வின் அடிப்படையில் தரமான உளுந்தின் பண்ணை விலை இம்மாதம் கிலோவிற்கு ரூ.64-67 வரை இருக்கும். மேலும் அறுவடையின் போது (டிசம்பர் 2016) உளுந்துவிலை ­à®•ுறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter