கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைப்‌ பொருட்கள் (பேக்கரி), மற்றும்‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ இரண்டு நாட்கள்‌ பயிற்சி வருகிற 12.07.2022 மற்றும்‌ 13.07.2022 தேதிகளில்‌ நடைபெற உள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைப்‌ பொருட்கள், சாக்லேட்டுகள்‌ மற்றும்‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி நடைபெற உள்ளது.

அடுமனைப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ இரண்டு நாட்கள்‌ பயிற்சி, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வருகிற 12.07.2022 மற்றும்‌ 13.07.2022 தேதிகளில்‌ நடைபெற உள்ளது.

அடுமனை உணவுப்‌ பொருட்கள்‌, சாக்லேட்‌ மற்றும்‌ மிட்டாய்‌ வகைகளுக்கு தற்பொழுது மக்கள்‌ மத்தியில்‌, அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக்‌ காரணம்‌ விரும்பத்தக்க வகையிலும்‌ பற்சுவைகளிலும்‌ மிக எளிதில்‌ இவை கிடைப்பதேயாகும்‌. இந்தப்பயிற்சி சிறு தொழில்முனைவோருக்கு தங்களது வருமானத்தைப்‌ பெருக்க பெரிதும்‌ உதவியாக இருக்கும்‌. ஆகவே, பயிற்சியின்போது கீழ்க்காணும்‌ அடுமனைப்‌ பொருட்கள, சாக்லேட்‌ மற்றும்‌ மிட்டாய்‌ வகைகள்‌ எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவையாவன:-

*ரொட்டி வகைகள்‌

*கடலைமிட்டாய்‌

*கேக்‌ மற்றும்‌ பிஸ்கட்‌

*சர்க்கரை மிட்டாய்‌ வகைகள்‌

*சாக்லேட்‌

இத்தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ள தொழில்முனைவோர்‌ மற்றும்‌ ஏனைய ஆர்வலர்கள்‌ ரூ.1,500.00 + 18% GST செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

பேருந்து நிறுத்தம்‌:- வாயில்‌ எண்‌ 7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641 003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌- 641 003.

மின்னஞ்சல்‌ - [email protected]

தொலைபேசி எண்‌ - 0422 - 6611268

Newsletter