ரூ.15.34 கோடிக்கு பாசிப்பயிர் இறக்குமதி- வேளான் பல்கலை தகவல்


இந்தியாவில் பாசிப்பயிர் மிக பரவலாக பயிரிடப்படும் முக்கியப்பயறு வகையாகும். வேளாண் அமைச்சகத்தின் நான்காவது மதிப்பீட்டின் படி, 2015-16 ஆம் ஆண்டு பாசிப்பயிரானது 33.8 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 16 லட்சம் உற்பத்தி டன்கள் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பாசிப்பயிர் உற்பத்தியில் முதலாவதாகவும், தொடந்ர்து மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், குஜராத், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகியவை பாசிப்பயிரை அதிக அளவு உற்பத்தி செய்யும் மாநிலங்களாக விளங்குகின்றன. 

மேலும், இராஜஸ்தானில் பாசிப்பயிர் உற்பத்தி இந்த ஆண்டு இயல்பாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 2014- 15 ஆம் ஆண்டு 2.3 à®²à®Ÿà¯à®šà®®à¯ எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.83 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, 

கடலூர், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகியவை பாசிப்பயிர் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

இந்தியா, 2015-16 ஆம் ஆண்டு ரூபாய் 15.34 கோடி மதிப்பிற்கு பாசிப்பயிரை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவிற்கு தனிப்பெரும் இறக்குமதியாளராக தான்சானியாவும் அதனைத் தொடர்ந்து மொசாம்பியாவும் உள்ளது. தான்சானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொத்த பாசிப்பயிரின் மதிப்பு மற்றும் அளவுகள் முறையே நாட்டின் மொத்த பாசிப்பயிர் இறக்குமதியில் 40.9 சதவீதம் மற்றும் 71.2 சதவீதம் ஆகும்.

தற்போது, உள்நாட்டு சந்தைகளுக்கு பாசிப்பயிர் வரத்து இல்லை. ஆனால், பெறிய அளவில் விலை அதிகரிக்கும் என்ற  à®Žà®¤à®¿à®°à¯à®ªà®¾à®°à¯à®ªà¯à®ªà®¾à®²à¯ இருப்பு வைக்கப்பட்டுளது.

இச்சூழலில், விவசாயிகள் முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புதி திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய பாசிப்பயிரின் பண்ணைவிலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. 

ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான பாசிப்பயிரின் பண்ணைவிலை கிலோவுக்கு ரூ.47 முதல் 50 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம், வேளாண்மை மற்றும் ஊரக 

மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்- 641003 என்ற முகவரியிலோ அல்லது 0422-2431405 என்ற கைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter