கோவை TNAU-வில்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதிக்கான பயிற்சி..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஜுன்‌ 20 முதல்‌ 24, 2022 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே (20 நபர்கள்‌) உள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதிக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஐந்து நாட்கள்‌ வேளாண்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி உழவர்கள்‌, பெண்கள்‌, இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள்‌, பட்டதாரிகள்‌, இளைஞர்கள்‌ மற்றும்‌ தொழில்முனைவோர்கும்‌ வேளாண் ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும்‌ ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஜுன்‌ 20 முதல்‌ 24, 2022 வரை வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக நபர்‌ ஒன்றுக்கு ரூபாய்‌ 10,000 - ரூபாய்‌ 1800 GST(18%) = ரூபாய்‌ 11,800/- (பதினோராயிரத்து எண்ணூறு) வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே (20 நபர்கள்‌) உள்ளது.

மேலும்‌ பதிவுக்கு மின்னஞ்சல்‌ [email protected], [email protected] மற்றும்‌ தொலைபேசி எண்‌: 0422-6611310.

Newsletter