கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள்‌ பயிற்சி..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌கழகத்தில், பூச்சியியல்‌ துறை சார்பாக ஒவ்வொரு மாதமும்‌ தேன்‌ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்‌ பயிற்சி (06.06.2022) அளிக்கப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில், பூச்சியியல்‌ துறை சார்பாக ஒவ்வொரு மாதமும்‌ தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூன்‌ 2022 மாதத்திற்கான பயிற்சி, 06.06.2022 திங்கட்‌ கிழமை அன்று அளிக்கப்படும்‌.

பயிற்சியின்‌ முக்கிய அம்சங்கள்‌:-

*தேனீ இனங்களைக் கண்டு பிடித்து வளர்த்தல்‌

*பெட்டிகளில்‌ தேனீ வளர்க்கும்‌ முறை மற்றும்‌ நிர்வாகம்‌

*தேனீக்கு உணவு தரும்‌ பயிர்கள்‌ மற்றும்‌ மகரந்த சேர்க்கை மூலம்‌ மகசூல்‌ அதிகரிக்கும்‌ பயிர்களின்‌ விவரம்‌.

*தேனைப்‌ பிரித்தெடுத்தல்‌

*தேனீக்களின்‌ இயற்கை எதிரிகள்‌ மற்றும்‌ நோய்‌ நிர்வாகம்‌

பயிற்சியில்‌ கலந்துகொள்ள விழைவோர்‌, பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சிக்‌ கட்டணம்‌ ரூ.590 (ரூபாய்‌ ஐந்நூற்றுத் தொண்ணூறு மட்டும்)‌ நேரிடையாக செலுத்த வேண்டும்‌. பயிற்சி நேரம்‌ காலை 9.00-முதல்‌ மாலை 5.00-மணி வரை. பயிற்சியின்‌ இறுதியில்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.

மேலும்‌ விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

வேளாண்‌ பூச்சியியல்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌ கழகம்‌,

கோயம்புத்தூர்‌

தொலைபேசி: 0422-6611214

மின்னஞ்சல்‌ : [email protected].

Newsletter