கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அங்கக வேளாண்மை பயிற்சி..!

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஜூன் 7-ஆம் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்‌ மூலம்‌ நேரடியாக (Direct Mode) அங்கக வேளாண்மை பயிற்சி வரும்‌ 07.06.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 - 1.00 மற்றும்‌ 2.00 - 5.30 வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில்‌,

*இயற்கை முறையில் பயிர்‌ சத்துக்கள்‌ மேலாண்மை

*களை மேலாண்மை

*இயற்கை உரம்‌ மற்றும்‌ பூச்சி விரட்டி தயாரித்தல்‌,

*இயற்கை முறையில்‌ பூச்சி மற்றும்‌ நோய்‌ கட்டுப்பாடு

*அங்கக சான்றிதழ்‌ பெறும்‌ வழிமுறைகள்‌ மற்றும்‌ பங்கேற்பாளர்களின்‌ உறுதியளிப்புத்‌ திட்டம்‌ போன்ற தலைப்புகளில்‌ பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியின்‌ பயிற்சி கட்டணம்‌ ரூ.590/-, கூடுதல்‌ விவரங்களுக்குக் கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்‌.

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

மின்னஞ்சல் : [email protected]

தொலைபேசி: 0422 6611206 / 0422 2455055

Newsletter